நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை … Read more

பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் சந்திப்பு

புதுடெல்லி: பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட வன்முறையால் அங்கிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சீக்கியர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தனது … Read more

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 கோடியை கடந்தது

வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.   உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.   இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.58 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் … Read more

தமிழகத்தில் 60.70 சதவீத வாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை … Read more

பஞ்சாப் சட்டசபை தேர்தல் – இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

சண்டிகர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16-ல் குரு ரவீந்திரதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, தேர்தல் தேதி பிப்ரவரி 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் … Read more

ஐரோப்பாவை அச்சுறுத்திய யூனிஸ் புயல் – 13 பேர் பலி

லண்டன்: இங்கிலாந்தில் உருவான யூனிஸ் புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.   யூனிஸ் புயல் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி … Read more

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது – டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் … Read more

வேலைவாய்ப்பு என்னாச்சு… ராஜ்நாத் சிங் பிரசார கூட்டத்தில் கோபத்துடன் கோஷமிட்ட இளைஞர்கள்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் எழுந்து வேலைவாய்ப்பு கோரி கோபத்துடன் முழக்கங்கள் எழுப்பினர். குறிப்பாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இனால் ராஜ்நாத் சிங் உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. அவர்களின் கோரிக்கை குறித்து விசாரித்த ராஜ்நாத் சிங், கொரோனா பரவல் காரணமாக சில சிரமங்கள் ஏற்பட்டதாகவும், ஆட்சேர்ப்பு … Read more

ஜெர்மனியர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் – வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பெர்லின்: ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன. எல்லையில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படுவதாக ரஷ்யா அரசு அறிவித்தாலும் அதனை அமெரிக்கா, உக்ரைன் ஏற்கவில்லை. உக்ரைனில் போர் பதட்டம் தொடர்ந்தபடி இருப்பதால், அங்கிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி, … Read more

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2.5 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி: உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது. … Read more