இந்தியாவில் 175 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.   இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 175.33 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்களப் பணியாளர்கள் … Read more

தமிழகத்தில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1146 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 43ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி … Read more

மருத்துவமனைகளில் குண்டு வைத்து மோடி, அமித் ஷாவை கொல்ல திட்டமிட்ட இந்தியன் முஜாகிதீன்- தீர்ப்பு விவரம்

அகமதாபாத்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், 2008ம் ஆண்டு ஜூலை 26 அன்று அகமதாபாத்தில் இரண்டு மருத்துவமனைகளில் குண்டு வெடித்ததாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்எல்ஏக்கள், … Read more

இந்தூரில் சாண எரிவாயு ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு நாளொன்றுக்கு 550 டன் பிரிக்கப்பட்ட மட்கும் குப்பைகள் சுத்திகரிக்கப்படும். அதேபோல நாளொன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயு, 100 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படும். கோவர்தன் ஆலை என்று பெயரிடப்பட்ட இந்த ஆலையானது, கழிவுப்பொருட்களை பணமாக்கும் கண்டுபிடிப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆலையை திறந்து வைத்து … Read more

பஞ்சாப்: தேர்தல் விதிமீறல் வழக்குகளை எதிர்கொள்ளும் முன்னணி தலைவர்கள்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அகாலி  தளம் தலைவர் சுக்பீர்  சிங் பாதல், காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான சரண்ஜித் சன்னி ஆகிய முக்கிய தலைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினர் மீது வீடியோ வெளியிட்டதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அகாலி தளம் துணை தலைவர் அர்ஷ்தீப் சிங் அளித்த புகாரின் … Read more

சோமாலியா ஓட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்- 15 பேர் உயிரிழப்பு

மொகடிஷு: சோமாலியாவின் பிலெத்வெயினி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று மதியம் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. வாடிக்கையாளர் போன்று வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.  ஓட்டலும் கடுமையாக சேதமடைந்தது. இந்த  தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  சோமாலியாவில் தேர்தல் நடைமுறைகளை முடிப்பதில் நீண்ட காலதாமதம் மற்றும் … Read more

5 மணி நிலவரம்- சென்னையில் 41.68 சதவீத வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்து. 8 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.  பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, … Read more

பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க விரைந்து செயல்படாத தீயணைப்பு அதிகாரிகள் இடமாற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள குரும்பாச்சி மலைக்கு சென்ற வாலிபர் பாபு கால் இடறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கி கொண்டார். கடந்த 7-ந் தேதி பாறை இடுக்கில் சிக்கி கொண்ட பாபுவை 2 நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மீட்பு பணிக்கு மட்டும் ரூ. 75 லட்சம் செலவானதாக கூறப்பட்டது. இதற்கிடையே 7-ந் தேதி … Read more

பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் … Read more

யாரும் கள்ள ஓட்டு போடவில்லை- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

சென்னை: தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது என்றும், இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில், சம்பந்தப்பட்ட வார்டில் மத்திய மந்திரி எல்.முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை … Read more