மோதிரம் வராததால் பெண்ணின் விரலை வெட்டி எடுத்த கொள்ளையன்- போலீஸ் வலை

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரூ கிராமத்தில் பெண் ஒருவர் நெல் வயல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,  மறைந்திருந்த கொள்ளையன் பெண்ணை பின்னாலிருந்து பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த பெண் தலையில் காய ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையன் பெண் அணிந்திருந்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கழட்ட முயன்றுள்ளான்.   ஆனால், கை விரலில் இருந்த மோதிரத்தை கழட்ட முடியாமல் போனதால், ஆத்திரத்தில் விரலை … Read more

மத்திய மந்திரி எல்.முருகனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள்- அண்ணாமலை தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கை பதிவு செய்தனர். மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு சற்று விறுவிறுப்படைந்தது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் இன்றும் பணப்பட்டுவாடா செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் … Read more

தானேவைத் தொடர்ந்து பல்ஹார் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல்- மகாராஷ்டிரா மக்கள் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் வெஹ்லோலி என்கிற கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 கோழிகள் திடீரென இறந்தன. இதையடுத்து, இறந்த கோழிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவில் கோழிகள் எச்5என்1 என்கிற பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியானது. இதன் எதிரொலியால் ஷாஹாபூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றியுள்ள அனைத்து பிராய்லர் கோழிகளையும் அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 25 ஆயிரம் பிராய்லர் … Read more

நவீன இந்தியாவின் வரலாற்றை ராகுல் காந்தி படிக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

கோண்டா: உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது: நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சீனாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்டதாக அவர் ( ராகுல் காந்தி) கூறினார். அவர் பண்டைய இந்தியாவின் வரலாற்றை படிக்கவில்லை, குறைந்தபட்சம் நவீன இந்தியாவின் வரலாற்றையாவது படிக்க வேண்டும். சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியை  பாகிஸ்தான், சீனாவிடம் ஒப்படைத்த போது  ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.  … Read more

தொண்டு நிறுவனத்தில் ஸ்வப்னாவுக்கு வழங்கப்பட்ட வேலையை ரத்து செய்த நிர்வாகிகள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் மற்றும் பெண் அதிகாரி ஸ்வப்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் சுங்க துறையினரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்பு அவர் வேறு வேலைகளுக்கு செல்ல முயற்சித்தார். … Read more

தமிழ் தாத்தா உ.வே.சா. தொண்டை போற்றுகிறேன்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்ப தாவது:- தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள், சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்…21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்- மு.க.ஸ்டாலின்

கழுதையை திருடியதாக மாணவர் தலைவர் கைது – சந்திரசேகர ராவை அவமதித்ததால் போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் என்.எஸ்.யு.ஐ. மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் பால்மூரி வெங்கட் நரசிங்கராவ். கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஹூசூர்பாத் சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் நடந்துகொண்டார். கழுதை ஒன்றை திருடி அதன்மேல் கேக்கை வைத்து பிறந்தநாள் கொண்டாடி முதல்-மந்திரியை அவமானப்படுத்தி அவரும், என்.எஸ்.யு.ஐ. உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கழுதையின் மீது … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் – அமெரிக்க அதிபர் தகவல்

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் முடிவு செய்துவிட்டார் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜோபைடன் நிருபர்களுக்கு பேட்டி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. மாநகராட்சி வார்டுகள் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இவர்களில் 2,062 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி … Read more

அன்னபிரசாதம் மட்டுமே பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு- திருப்பதியில் ஓட்டல்களை மூடுவதற்கு எதிர்ப்பு

திருப்பதி: திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் அன்ன பிரசாதம் மட்டுமே வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் திருப்பதி திருமலையில் இயங்கும் அனைத்து ஓட்டல்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பழைய அன்னதான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளின் லக்கேஜ் கவுண்டர் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்னதான கூடத்தில் பக்தர்களை அனுப்புவது மற்றும் வெளியே அனுப்புவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து … Read more