கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது

கீவ்: ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது. எல்லையில் ரஷியா ஒரு 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. இவ்விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸ் மாகாணத்தில் ஒரு … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.   காலையில் வாக்குப்பதிவு தொடங்கியுவுடன் முக்கிய பிரமுகர்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.  சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு காரில் வந்த விஜய் மாஸ்க் அணிந்து வாக்களித்தார். விஜய் உடன் அவரது ரசிகர்களும் அந்த வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வாக்களித்தனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு … Read more

முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி கிடைப்பதை தடுக்க பா.ஜனதா முயற்சி: சித்தராமையா

பெங்களூரு : கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி-கல்லூரிகளுக்கு வருவது புதியது அல்ல. யாருக்கும் கல்வி கிடைப்பது மறுக்கப்படக்கூடாது. ஐகோர்ட்டு தனது உத்தரவில் கல்லூரி வளர்ச்சி குழுக்கள் நிர்ணயித்துள்ள சீருடை இருக்கும் கல்லூரிகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை, ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு தனது துறையின் கீழ் இயங்கும் … Read more

ஈரான் தீவிரமாக இருந்தால் ஓரிரு நாட்களில் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்- அமெரிக்கா தகவல்

வியன்னா: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதை தொடர்ந்து, ஈரான் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வென்றாக புறக்கணித்து வருகிறது. அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்ததால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், பரஸ்பர புரிதலோடு ஈரான் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தால் … Read more

முதல் டெஸ்ட் – தென் ஆப்பிரிக்காவை சுருட்டி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 95 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 482 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஹென்ரி நிக்கோல்ஸ் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் … Read more

இந்தூரில் சாண எரிவாயு ஆலையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தூர்:  குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்கும் தொலைநோக்கோடு இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் கழிவை பணமாக்கும் மற்றும் சுழற்சி பொருளாதாரம் என்ற கொள்கைகளின் கீழ் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இங்கு நாளொன்றுக்கு 550 டன் பிரிக்கப்பட்ட மட்கும் குப்பைகள் சுத்திகரிக்கப்படும். அதேபோல … Read more

ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 6 வயது சிறுவன் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்து வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். 25 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 10 மீட்டர் ஆழத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டான். இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கயிறு கட்டி சிறுவனை மீட்க முயன்றனர். அவர்களின் இந்த முயற்சி பலனளிக்காமல் … Read more

டி20 போட்டிகளில் 100வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட் அரைசதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் … Read more

உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

லக்னோ: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் உத்தரகாண்ட், கோவா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக கடந்த 14-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட்டில் 59.51 சதவீதமும், 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 78.55 சதவீதமும் பதிவாகி இருந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ந்தேதி 58 … Read more

லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் – கனடா பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட 70 பேர் கைது

ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் … Read more