மேற்கு வங்காள ஆளுநரை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில், மேற்கு வங்காள ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஆளுநர் ஜக்தீப் தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவர் பா.ஜ.க.வின் குரலாக பேசி வருகிறார். இதனால் ஜக்தீப் தங்கரை … Read more

2 கோடி சிறார்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … Read more

கொரோனா பரவல் எதிரொலி – ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு

ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் வரும் 6 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முழு ஊரடங்கு என்பது தீர்வல்ல. கொரோனா வைரஸ் … Read more

ரஞ்சிக் கோப்பை – அறிமுக ஆட்டத்தில் முச்சதம் அடித்து சாதித்த முதல் வீரர் சகிபுல் கனி

கொல்கத்தா: ரஞ்சிக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் நடந்து வரும் போட்டியில் பீகார், மிசோரம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பீகார் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மங்கல் மாரோர் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ரிஷாவ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லக்கன் ராஜா 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பாபுல் குமார், … Read more

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஸ்வப்னாவை கைது செய்தனர். இவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் கைதானார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கில் சிக்கியதால் ஸ்வப்னா வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பணிக்காலத்தில் அவருக்கு … Read more

2வது போட்டியில் திரில் வெற்றி… வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் தலா 52 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 19 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 33 ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம்

மேற்கு வங்கம் துர்காபூரில் பெரிய ஸ்டீல் ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் மோட்டார் ஸ்பிரிட் தர பிரிவில் தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆக்சிஜன் வேக்யூம் யூனிட்டில் இருந்து திடீரென தீ பிடித்தது. இதில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 44 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் தீயை உடனடியாக அணைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், … Read more

ஊரடங்கை கைவிட வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

ஜெனீவா:  உலக அளவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் … Read more

கோலி, ரிஷப் பண்ட் அசத்தல்: வெஸ்ட் இண்டீசுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களிலும், இஷான் கிஷன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். பார்மை இழந்திருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலளித்தார் … Read more

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய அலுவலக நேரம்- சண்டிகரில் நடவடிக்கை

பஞ்சாப் மாநில தலைவர் சண்டிகரில் அலுவலக நேரம் மாற்றயமைத்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் இருந்து பஞ்சாப், அரியானா மற்றும் மத்திய அரசு உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சண்டிகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அலுவலக நேரம் மாற்றி நடவடிக்கை எடுக்க சண்டிகர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய அலுவலக நேரப்படி காலை 9.30 மணி முதல் … Read more