பிரிட்டனை தாக்கியது யூனிஸ் புயல்… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும்,  பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது.  இந்த புயலானது கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான புயல் என கருதப்படுகிறது. புயல் தாக்கியபோது வைட் தீவில் மணிக்கு 122 மைல் … Read more

கூடங்குளத்தில் அணு கழிவுகளைச் சேகரிக்கும் மையம் அமைக்கக்கூடாது- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும்  பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,  … Read more

பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் நிறைவு- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சண்டிகர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16-ல் குரு ரவீந்திரதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பங்கேற்க பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, தேர்தல் தேதி பிப்ரவரி 20ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் … Read more

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார்

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.  கோவையில் அனைத்து வார்டுகளிலும் போலீஸ் துணையுடன் பரிசுப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். … Read more

போலீசார் மீது 5 நாய்களை ஏவி விரட்டியடித்த வாலிபர் – தப்பியோடியவரை பிடிக்க நண்பர்கள் 4 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பாலாரி வட்டம் பகுதியை சேர்ந்தவர் விஷால். அதே பகுதியை சேர்ந்தவர் அல்தாப். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருள்கள் வாங்க சென்றார். திரும்பி வரும் போது அவர்களை வாலிபர் விஷால் தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். மேலும் அவர்களை தாக்கவும் செய்தார். இதில் படுகாயம் அடைந்த தம்பதியர் இருவரும் பாலாரிவட்டம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வாலிபர் விஷால் மீது வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் … Read more

சரக்கு கப்பலில் தீ விபத்து: ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் எரிந்து நாசம்

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல்  அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்ச்சுகல் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஃபெலிசிட்டி ஏஸ் ரக கப்பல் … Read more

புதிய அணை திட்டத்தை ஏற்க முடியாது- கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது.  இது 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக … Read more

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.  இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி … Read more

ரஷ்யா-உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேட்டோ அமைப்பு உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை தணிக்க பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. ரஷ்யாவும், உக்ரைனும் போர் பதற்றத்தை தணித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியது. இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான … Read more

வெளி ஆட்கள் தங்கி இருக்கிறார்களா?: என ஆய்வு- லாட்ஜூகளில் போலீசார் விடிய விடிய சோதனை

சென்னை: தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் அதன் பிறகு வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தங்கக் கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோன்று யாராவது தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், … Read more