தூங்கவிடாமல் தடுக்கும் எச்சரிக்கை கருவி: நாக்பூர் ஓட்டுனர் கண்டுபிடிப்பு

வாகனங்கள் ஓட்டும்போது ஓட்டுனர்கள் தூங்கிவிடுவதால் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்காக வாகன ஓட்டுனர்களை தூங்கவிடாமல் எச்சரிக்கும் வகையில் சாதனம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டுனர் கௌரவ் சவ்வாலாகே என்பவர். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- சமீபத்தில் தூக்கம் காரணமாக இரவில் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானேன். அதனால் வாகனம் ஓட்டும்போது யாராவது தூங்கினால் எச்சரிக்கை அளிக்கும் வகையில் கருவி ஒன்றை உருவாக்க நினைத்தேன். அதன்படி, அதிர்வுகளுடன் கூடிய … Read more

கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க் – சர்ச்சையால் டுவிட்டை நீக்கினார்

நியூயார்க்: கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக லாரி டிரைவர்கள் கனடாவில் போராட்டத்தில் குதித்தனர். பாராளுமன்றத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மேலும் கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலத்தையும் மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பாலத்தில் நிறுத்தி … Read more

5 நதிகளை இணைக்க டெல்லியில் இன்று ஆலோசனை: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்கு பெரிய வரப்பிரசாதம்

சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக … Read more

சுயேட்சையாக போட்டியிடும் மனைவிக்கு விவாகரத்து நோட்டீசு அனுப்பிய கணவர்

கொல்கத்தா: மேற்குவங்காள மாநிலம் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் 9-வது வார்டில் போட்டியிட சுர்ஜித்ராய் சவுத்ரி என்பவர் விருப்பமனு செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு சீட் வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் அந்த வார்டில் தும்பாதாஸ் கோஷ் என்பவருக்கு 9-வது வார்டு ஒதுக்கப்பட்டது. இதை சரிகட்டும் வகையில் சுர்ஜித் ராய் சவுத்ரிக்கு 10-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. … Read more

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் … Read more

முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது, முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என பேசினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது. இதையும் படியுங்கள்… மந்திரி ஈஸ்வரப்பாவை … Read more

உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு

கிவ்: ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை 28-ந் தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார்

சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பிறந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த மு.க.ஸ்டாலின் , பட்டப்படிப்புக்கு முந்தைய கல்வியை விவேகானந்தா கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, 1973-ம் ஆண்டு மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளி படிக்கும் போதே 1967-1968-ம் ஆண்டில், சென்னை கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் தொடங்கி, அரசியலில் ஈடுபட்டார். 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி துர்காவை மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து கொண்டார். இப்படி அவரது … Read more

இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் இறப்பா?- மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம்பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை மறுக்கும் விதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:- * இந்த அறிக்கைகள் தவறானவை என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. அவை … Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

இஸ்லாமாபாத் : உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசைப் பாராட்டினார். பில்கேட்சுக்கு இம்ரான்கான் மதிய விருந்து அளித்து கவுரவித்தார். பில் கேட்ஸ், வறுமை ஒழிப்புக்காகவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ விருது … Read more