தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.616 உயர்வு

சென்னை : தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 663-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 304-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும், ஒரு பவுன் ரூ.37 … Read more

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்

புதுடெல்லி: இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் … Read more

பிரேசில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் … Read more

இது உனக்கான நாள் அல்ல – டோனி கூறியதை நினைவு கூர்ந்த ராகுல் திரிபாதி

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்திய வீரர் ராகுல் திரிபாதியை 8.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில், ராகுல் திரிபாதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெரிய போட்டிகளுக்கு முன் தோனி எப்படி அமைதியாக இருப்பது என்பதை வெளிப்படுத்தினார். தனது அணி வீரர்களை எப்போதும் இளைய சகோதரர்களைப் போல நடத்துகிறார். அவர்களின் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு வழிகாட்டுகிறார்.  ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா … Read more

பஞ்சாப் தேர்தல் – பிரசார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சென்று வழிபட்டார். அதன்பின், அவர் பரிட்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார மேடையில் அவருக்கு அணிவிக்க பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது மேடையில் நின்றிருந்த பா.ஜ.க. தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது … Read more

ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

வார்சா: உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன. அதேசமயம் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்து வருவதால், அங்கு தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பெல்ஜியம், போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அமெரிக்க  பாதுகாப்பு செயலாளர் லாயிட் … Read more

பாஜக ஆட்சியில் ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள் -மன்மோகன் சிங் கடும் தாக்கு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார்.  குறிப்பாக வேளாண் சட்டங்கள் மீதான அரசின் கொள்கைகள், நாட்டில் மக்களின் கடனை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.  “இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதலில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் ஊடுருவி உள்ளது. பாஜக … Read more

மந்திரி ஈஸ்வரப்பாவை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரசார் தொடர் போராட்டம்

பெங்களூர்: கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அன்றைய தினம் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வரப்பா, டெல்லி செங்கோட்டையில் … Read more

ஈரானில் சோகம் – 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.  விசாரணையில், வாயுக்கசிவு மற்றும் ஹீட்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு செய்தி … Read more

உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களை மீட்கும் திட்டம் இல்லை- மத்திய அரசு

புதுடெல்லி: ரஷியா- உக்ரைன் இடையிலான மோதல் தீவிரமடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே, உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.  ஆனால், உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்களையோ அல்லது தூதரக அதிகாரிகளையோ மீட்கும் திட்டம் இல்லை எனவும், தற்போது உக்ரைனில் உள்ள இந்தியர்களின் … Read more