அமெரிக்காவில் பயங்கரம் – தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக, உவால்டே மாநில கவர்னர் கூறுகையில், சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர். அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் எனவும், … Read more

மாவட்ட பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மந்திரி வீட்டுக்கு தீ வைப்பு – ஆந்திராவில் பதற்றம்

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில், அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்துத்துறை மந்திரி விஸ்வரூப் வீட்டின் முன் நேற்று ஏராளமானோர் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர் ஜெலன்ஸ்கி

25.5.2022 00.45: சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் படுகொலை செய்து வருகின்றன. ரஷியாவின் மற்ற பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ஏற்கப் போவதில்லை என தெரிவித்தார்.

சென்னையில் துணிகரம் – பா.ஜ.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை

சென்னை:  சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30). பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு 7:50 மணிக்கு பாலசந்திரன் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்குச் சென்றார். அங்கு சிலருடன் பாலசந்திரன் பேசிக் கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை … Read more

குவாட் தலைவர்களுக்கு சஞ்சி கலை, கோண்ட் கலை ஓவியம், கைவினைப் பெட்டியை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியே சந்தித்தார். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பைப் பரிசாக வழங்கினார். சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி, உத்தர பிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை … Read more

மில்லர், பாண்ட்யா அதிரடி – ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 … Read more

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு- மத்திய அரசு அறிவிப்பு

சூரியகாந்தி, சோயா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வரியில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரி விலக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு செய்துள்ளது. 20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்.. இந்தோ- … Read more

ஐபிஎல் முதல் பிளே ஆப்: குஜராத் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் இரண்டு … Read more

எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனது தந்தையின் மரணம்- ராகுல் காந்தி

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் ஸ்ருதி கபிலாவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, 1991-ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் பேரணியின்போது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாள் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனது தந்தையின் மரணம். அதைவிட பெரிய அனுபவம் வேறு … Read more

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து

மும்பை: 15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.  இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்  கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி  குவாலிஃபயருக்கு தகுதி … Read more