உங்கள் மனதை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன் – ஜோகோவிச்சுக்கு பூனாவாலா டுவிட்

லண்டன்: செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய நபராக என்னை சேர்க்கக்கூடாது. ஆனால் ஒரு தனி நபரின் தேர்வு செய்யும் சுதந்திரத்தை ஆதரிப்பவன். என் உடல் சார்ந்த விஷயங்கள் தான் எனக்கு மிக முக்கியமான விஷயமே தவிர டென்னிஸ் பட்டங்கள் அல்ல என தெரிவித்தார். இந்நிலையில், உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள் என நம்புவதாக ஜோகோவிச்சுக்கு … Read more

போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் – கனடா பிரதமர் வலியுறுத்தல்

ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் … Read more

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் – டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்கே பழைய சீமாபுரி பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு உரிய வகையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதுபற்றி தேசிய பாதுகாப்புப் படைக்கு தெரிவித்தனர் இதையடுத்து, போலீசார் சம்பவ இடம் சென்று சோதனையிட்டனர். அதில், 3 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று இருந்தது. இந்த வெடிகுண்டில் அம்மோனியம் நைட்ரேட், ஆர்.டி.எக்ஸ் மற்றும் டைமர் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்பின் தேசிய பாதுகாப்புப் படையினர் அந்த வெடிகுண்டை வேறு இடத்திற்கு கொண்டு சென்று செயலிழக்கச் … Read more

அமரீந்தர் சிங்கை நீக்கியது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றி பெறும் முனைப்புடன் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் பதேகார்க் நகரில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: போதைப் பொருள் … Read more

தமிழகத்தில் மேலும் 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு- 6 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 1,310 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் … Read more

மன்மோகன் சிங்கிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை- நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார்.  ‘இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதலில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளது’ என்றும் மன்மோகன் சிங் சரமாரியாக குற்றம்சாட்டினார். மன்மோகன் சிங்கின் இந்த குற்றச்சாட்டிற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் … Read more

ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?- ரோகித் சர்மா விளக்கம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது சிலரை முனுமுனுக்க வைத்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் … Read more

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிறந்தநாள்- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவுகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி: மாநிலத்தின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தலைவரான தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கூட்டாட்சித் தன்மையையும், மாநிலங்களின் மாண்பையும் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம். … Read more

உக்ரைன் எல்லையில் படைகளை குறைப்பதற்கு பதில் அதிகரிப்பதா? ரஷியாவுக்கு நேட்டோ கண்டனம்

கீவ்: ரஷியா, உக்ரைன் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து தற்போது எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பதற்றத்தை தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.   எல்லைப்பகுதியை ஒட்டி படைகளை நிறுத்தி உள்ள ரஷியா, எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. எனினும், போர் பதற்றம் தணியவில்லை.  ராணுவ பயிற்சியை நிறைவு செய்ததால் உக்ரைன் எல்லையில் உள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், பிரசாரம் விறுவிறுப்படைந்தது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது மக்களை சந்தித்து ஓட்டு … Read more