தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி வீடுகளில் வருமானவரி சோதனை

புதுடெல்லி: என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குசந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை அந்த பதவி வகித்தார். இவரது பதவி காலத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கும், பங்குசந்தைக்கும் பெரிதாக தொடர்பு கிடையாது. இவருக்கு மாத சம்பளமாக ரூ.15 லட்சத்துக்கு நியமிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1.68 கோடி ஊதியம் … Read more

ரஞ்சி கோப்பை: மும்பை அணிக்காக சதம் விளாசிய ரகானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரகானே திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது. இதற்கிடையே பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, ரகானே ரஞ்சி டிராபியில் விளையாடி தனது ஃபார்மை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், தான் சர்வதேச போட்டியில் சறுக்கியபோது ரஞ்சி டிராபியில் விளையாடினேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று ரஞ்சி கோப்பை … Read more

உதயாஸ்தமன சேவையில் திருப்பதியில் 38 டிக்கெட்டுகள் மூலம் ரூ.70 கோடி வசூல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் உதயாஸ்தமன சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடைபெறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த டிக்கெட்டின் விலை ரூ.1.50 கோடியாகும். மற்ற சாதாரண நாட்களில் இதே டிக்கெட்டின் விலை ரூ. 1 கோடி என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. டிக்கெட்டுகளை பெற்ற பக்தர் தனது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்து ஏழுமலையானுக்கு தினசரி நடைபெறும் சுப்ரபாத சேவை முதற்கொண்டு, இரவு ஏகாந்த சேவை நடைபெறும் வரை அனைத்து … Read more

ரஷிய அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது

மாஸ்கோ: ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கோரி அகிம்சை வழியில் போராடி வந்த இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தி, ஜெர்மனியில் யூதர்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த வலியுறுத்தி 1939-ம் ஆண்டு ஹிட்லருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். காந்தி, ஹிட்லருக்கு எழுதிய … Read more

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் வெற்றி யாருக்கு?- இறுதி கள நிலவரம்

சுற்றி சுற்றி வந்தார்கள்… முடியும், முடியாது என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் நாங்கள் வந்தால் எல்லாவற்றையும் செய்து முடிப்போம் என்ற ரீதியில் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்தார்கள். மக்களும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் சொன்னவற்றை யோசிக்க நாளை ஒருநாள் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தங்கள் பிரதிநிதிகளை அடையாளம் காட்டப் போகிறார்கள். மக்கள் ரகசியமாக காட்டும் அடையாளம் 22-ந்தேதிதான் வெளிப்படையாக தெரிய வரும். நடைபெற உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி தேர்தலிலும் எல்லோரது … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகள் முன்பு பொங்கலிட்ட பெண்கள்

திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மாசிமாதம் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடத்தில் பொங்கலிட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எனவே பெண்கள் அனைவரும் வீடுகளிலேயே பொங்கலிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தந்திரி தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். … Read more

தலிபான் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கும் பெண்

ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்வேறு தடைகளை விதித்தது. குறிப்பாக, குழந்தைகள், பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து மக்களை துன்புறுத்தியது. தலிபான் கட்டுப்பாடு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. மேலும், ஆப்கானிஸ்தான் அரசாங்க சொத்துக்கள் முடக்கம் மற்றும் தாலிபான் மீதான சர்வதேச தடைகள், வெளிநாட்டு உதவி நிறுத்தம், ஆகியவற்றால் அந்நாட்டு மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர். இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வேலைக்கு … Read more

என்னை கொல்ல தி.மு.க.வினர் சதி- சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காந்தி சிலை அருகே இன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- கடந்த 2006-ம் ஆண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறப்படுபவர், தான் இருந்த கட்சியில் இருந்து மாறி தற்போது தி.மு.க.வில் இணைந்து தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். எனக்கு தரப்பட்ட போலீஸ் … Read more

வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குதான் ஹிஜாப் தேவை: பிரக்யா தாகூர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், உடுப்பி மாவட்டத்தில் ஆறு மாணவிகள் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். அதில் இருந்து ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது இதுகுறித்த விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பா.ஜனதா எம்.பி. பிரக்யா தாகூர், வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குதான் ஹிஜாப் … Read more

60 ஆண்டுகளில் முதல் முறையாக சுறா தாக்கி ஒருவர் பலி: சிட்னி கடற்கரை மூடல்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஒருவரை பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி அபாயப் பகுதி … Read more