சென்னையில் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராகும் 5 லட்சம் இளைஞர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி யில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி யில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுவதால் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக உள்ளனர். இந்த … Read more

போலீஸ் உடன் மோதல்: கை விலங்குடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்ட பெண்கள்..!

பீகார் மாநிலத்தில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மணல் கொள்ளைகளை தடுக்க ஆளில்லா விமானங்கள் மூலம் சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. மணல் சுரங்கங்களை வரைமுறைப்படுத்த அவற்றை ஏலம் விட அரசு முடிவு செய்தது. அதன்படி கயா மாவட்டத்தில் உள்ள மணல் சுரங்கங்கள், குவாரிகளை ஏலம் விட அதிகாரிகள் சென்றனர். அப்போது சட்டவிரோத மணல் குவாரிகளில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் … Read more

221 புள்ளிகளுடன் உயர்ந்த மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 57,996.68 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 221 புள்ளிகள் உயர்ந்து 58,217.69 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தற்போது 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 117.11 புள்ளிகள் சரிந்து 57,879.57 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 7.60 புள்ளிகள் சரிந்து 17,314.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆக்சிஸ் வங்கியின் புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. … Read more

இந்தியாவில் புதிதாக 30,757 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 4 கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 315 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 2.45 சதவீதத்தில் இருந்து 2.61 ஆக உயர்ந்தது. அதே நேரம் வாராந்திர பாதிப்பு விகிதம் 3.32 சதவீதத்தில் இருந்து 3.04 ஆக குறைந்துள்ளது. நேற்றைய பாதிப்பில் கேரளாவில் … Read more

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்

லண்டன்: இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என … Read more

அவர் என்னை காலா என்று அழைக்கிறார் – சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்

மொஹாலி: பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதைத் தடுக்குமாறு அவர் ( பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) வேண்டுகோள் விடுக்கிறார். அவர் என்னை கலா (கருப்பு) என்று அழைக்கிறார்.  … Read more

ஹிஜாப் பின்னணியில் சதி: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கருத்து

திருவனந்தபுரம் : கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளது. ஷபானு வழக்கை தோல்வியடைய வைத்தவர்கள் தான் இதன் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.முத்தலாக் தடையால் வேதனை படுபவர்கள் தான் ஹிஜாப் விவகாரத்தை பெரிதாக்குகின்றனர். இதுபோன்ற விவகாரங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என குரானில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் … Read more

‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்

மெல்போர்ன் : ‘தண்ணி அடிப்பவர்களை கொரோனா ஒண்ணும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது. ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரை, அதன் கண்டுபிடிப்புகளுக்காகவே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கிறதாம். அதேவேளையில், … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்:இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

சென்னை: தமிழகத்தில்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள … Read more