அவர் என்னை கலா என்று அழைக்கிறார் – சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்

மொஹாலி: பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதைத் தடுக்குமாறு அவர் ( பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) வேண்டுகோள் விடுக்கிறார். அவர் என்னை கலா (கருப்பு) என்று அழைக்கிறார்.  … Read more

பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது – ரோகித் சர்மா கருத்து

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20  போட்டியில் இந்திய அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.  இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் … Read more

கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்கிற தனி நபர்கள், வெளிநாடுகளில் இருந்து  வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர் முடிவின்படி கொரோனா … Read more

இம்ரான்கான் குறித்து சர்ச்சை பேச்சு – பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் கைது

இஸ்லாமாபாத்: தமது அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்களுக்கு சிறந்த செயல்திறன் சான்றிதழை வழங்க பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.  இது குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் மொஹ்சின் பெய்க், பிரதமர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாக தெரிகிறது.  மேலும் பாகிஸ்தான் தகவல் தொடர்பு மற்றும் அஞ்சல் சேவைகள்துறை அமைச்சர் முராத் சயீத் குறித்தும் பாலியல் ரீதியாக அவர் தரக் குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இது குறித்து அமைச்சர் … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்

பிரஸ்சல்ஸ்: ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்தது. ஆனால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ராணுவ பயிற்சியை நிறைவு பெற்றதால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் … Read more

ஒடிசா கல்யாண மன்னன் மீது மேலும் 3 பெண்கள் புகார்

புவனேஸ்வர்:  ஒடிசா மாநிலம் கேந்திரா பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் 66 வயதான பிதுபிரகாஷ் சுலைன். இவர் தன்னை ஹோமியோபதி டாக்டர் என கூறி கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர, படித்த, வசதி படைத்த பெண்களை மோசடி செய்து ஏமாற்றி மணந்துள்ளார்.  ரமேஷ் சந்திர ஸ்வைன், டாக்டர் ரமணி ரஞ்சன் ஸ்வைன் என பல்வேறு பெயர்களில் அவர் பெண்களிடம் பழகியுள்ளார்.  இவரது வலையில் படித்த பெண்கள், வக்கீல், ஆசிரியை … Read more

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்ப கூடுதல் விமானங்கள் இயக்கம்

கெய்வ் ரஷ்யா- உக்ரைன் இடையேயான  போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் வசிக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்கள்  வெளியேறும்படி தலைநகர் கெய்வ் ல் உள்ள இந்திய தூதரகம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.  இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த விமானங்களின் பட்டியலையும் தூதரகம் … Read more

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த பயிற்சியாளர்கள் நியமனம் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தி்யாவின் விளையாட்டுப் பயிற்சியை வலுப்படுத்தும் முயற்சியாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், இந்திய விளையாட்டுக்கள் ஆணையமும் 398 பயிற்சியாளர்கள் பணியை நீடித்துள்ளன. இது குறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது: 2024 மற்றும் 2028 ஒலிம்பிக் உட்பட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் தயார்படுத்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் விளையாட்டு வீரர்களும், சர்வதேச நிலையில் போட்டியிட்டவர்களும், பதக்கம் … Read more

திருப்பதி அஞ்சனாத்திரி மலையில் உள்ள அனுமன் பிறந்த இடத்தில் பூமி பூஜை

திருமலை: திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்திரி மலையில்தான் அனுமன் பிறந்ததாகக் கருதப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்வெட்டு, புவியியல் மற்றும் அறிவியல் சான்றுகளுடன்  அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்தப்படுத்தி உள்ளது. இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை சார்பில் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி பர்வதத்தில் அனுமன் பிறந்த இடத்தை புனித தலமாக மாற்றும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. விசாக ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி,  ராம ஜென்மபூமி, ஹனுமான் ஜென்ம பூமி தலைவர் … Read more

பிரேசிலில் கனமழை: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலி

பிரேசிலியா: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.  கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெருக்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் இடிந்து விழுந்தன. நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 38 பேர் … Read more