அந்த வாக்குறுதியையும் விரைவில் நிறைவேற்றுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில்தான்! பழவேற்காட்டுக்கு … Read more

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மதுபானம் கடத்திய சுங்க துறை கண்காணிப்பாளர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தலில் சில சுங்க துறை அதிகாரிகளே ரகசியமாக ஈடுபடுவதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள டியூட்டி பிரீஷாப்பின் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

சாதனை… 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியது கோவா

பனாஜி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர்.  இந்நிலையில், கோவா மாநிலம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. கோவாவில் தகுதி உள்ள 11.66 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் ஐரா அல்மெய்டா தெரிவித்தார். இந்த இலக்கை … Read more

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும்- பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:- குஜராத்திலும் தற்போது தேசிய அளவிலும் ஆக  20 ஆண்டுகளாகப்  பொறுப்பில் உள்ள எனக்கு, சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் முக்கிய கவனம் பெறும்  துறைகளாக உள்ளன.  காலநிலை நீதி மூலம் மட்டுமே சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சாத்தியமாகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தித்  தேவை இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை மறுப்பது கோடிக்  கணக்கானவர்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமமாகும். வெற்றிகரமான … Read more

ஏரியில் விழுந்த போர் விமானம்- பைலட் உயிரிழப்பு

பாங்காக்: மியான்மரின் சகாயிங் நகரின் அருகே போர் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த பைலட் உயிரிழந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், விமானப்படையின் விருப்பத் தேர்வான நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான … Read more

கட்டப்பஞ்சாயத்து செய்யாத கவுன்சிலர் வேணுமா… பாஜகவுக்கு ஓட்டு போடுங்க: அண்ணாமலை பிரசாரம்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, முதலமைச்சர் நேரில் வந்து வாக்கு சேகரிக்காத முதல் தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளதாக விமர்சனம் செய்தார். சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது:- முதல்வர் நேரில் வந்து பிரசாரம் செய்யாமல் அவரது அறையில் இருந்து கம்ப்யூட்டரைப் பார்த்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். 2 கோடியே 64 லட்சம் பேர் ஓட்டு போடும் தேர்தலில் மாநில … Read more

கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம்- மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். அதில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம் என கூறி உள்ளார்.  ‘புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் … Read more

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் … Read more

பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு

புதுடெல்லி: நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஹெல்மெட்டுகளை தயாரிக்கும்படி தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை 40 கிமீ வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் … Read more

பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் சிக்கிய தலையுடன் மாயமான சிறுத்தை: 2 நாட்களுக்கு பின் பிடிபட்டது

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் கிராமம் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. அந்த கேனில் இருந்து சிக்கிய தலையை எடுக்க தீவிர முயற்சி செய்துக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், வீடியோ எடுத்து வனத்துறைக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். ஆனால் அதற்குள் சிறுத்தை காட்டிற்குள் சென்றுவிட்டுள்ளது. இந்த சிறுத்தையை மீட்க சஞ்சய் காந்தி தேசிய … Read more