ஊழல் செய்வதில் காங்கிரஸ் அசல் என்றால் ஆம் ஆத்மி நிழல் – பிரதமர் மோடி விளாசல்

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பத்தோன்காட் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- பஞ்சாப் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். கேப்டன் … Read more

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- ஒருவர் பலி

பெர்லின்: ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில் உள்ள முனிச் நகரில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் மற்றொரு பயணிகள் ரெயில் வந்தது. அப்போது 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் … Read more

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ஸ்மார்ட் சிட்டி என்றழைக்க முடியுமா? கமல்ஹாசன் டுவிட்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப் பிரச்னை, பாதாள சாக்கடைப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள். போர்க்களம் போலிருக்கிறது மதுரை. மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் … Read more

ஹிஜாப்பை அகற்ற சொன்னதால் கர்நாடகாவில் 30 மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளிநடப்பு

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான உடைகளை அணியக்கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ள நிலையில் அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கியபிறகே மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பல மாணவிகள் தேர்வு எழுதாமல் புறக்கணித்தனர். ஹினா கவுசர் என்ற … Read more

சைபர் தாக்குதல்: உக்ரைன் அரசு இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்

உக்ரைன்: உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் கூறும்போது, ‘உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த சைபர் குழு உக்ரைன் அரசின் இணையதளத்தை முடக்கி உள்ளன. பிரைவாட்-24 வங்கி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.  இதையும் படியுங்கள்…தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் அத்துமீறலை தடுக்க வேண்டும்- … Read more

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு

வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உருமாறிய கொரோனா வைரசுகளுக்கு எதிராகவும் தடுப்பு மருந்துகள் நல்ல பலன்களை அளிக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அது நல்ல பலனை அளிக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், … Read more

உக்ரைனை ரஷ்யா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது. நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா படைகளை குவித்ததால் உக்ரைனை தாக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. மேலும் கிழக்கு ஐரோப்பியாவுக்கு அமெரிக்கா கூடுதல் … Read more

தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் நாளை பிரேமலதா பிரசாரம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகவே அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அவர் காணொலி காட்சி மூலம் அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், … Read more

சமூக வலைதளத்தை கலக்கும் கூலி தொழிலாளியின் ருசிகர பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கூலி தொழிலாளி ஒருவர் கோடீஸ்வரர் போல வலம் வரும் வீடியோ வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் ஒருவர் லுங்கியை மடக்கி கட்டியபடி, கையில் கவர் ஒன்றை பிடித்த படி சாதாரணமாக நடந்து வருவதும், பின்னர் அதே நபர் கோட், சூட் அணிந்து கண்ணில் கருப்பு கண்ணாடியும், கையில் ஐபேடுடனும் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ வெளியான ஒருசில மணி நேரத்தில் … Read more