சோமாலியாவில் கண்ணி வெடியில் சிக்கி 4 பேர் பலி

மொகாதிசு: கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் சாலையில் பயங்கரவாதிகள் கண்ணி வெடி ஒன்றை புதைத்து வைத்திருந்தனர். அந்த சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. … Read more

ஓட்டலில் உணவு பரிமாறும் பட்டு சேலை அணிந்த ரோபோ

பெங்களூரு: இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ பட்டு சேலையுடன் வந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு வருகிறது. என்னதான் அறிவியல் வளர்ச்சி பிரமிக்கவைத்தாலும், நாம் கேட்டதும் கொண்டு வரும் ஓட்டல் ஊழியர்கள் போல் ரோபோவால் ஓடோடி … Read more

5 ஆண்டு தீவிர காதல்- காதலர் தினத்தில் தம்பதியான திருநங்கைகள்

திருவனந்தபுரம்: திருச்சூர் சாலக்குடியை சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சியாமா. இருவரும் திருநங்கைகள் ஆவர். மனு கார்த்திகா திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுதுறையில் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சியாமா கேரள சமூக நலத்துறையில் திருநங்கையருக்கான பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் நிலையான வேலை, அதற்கேற்ற வருமானம் கிடைத்த பின்னரே திருமணம் செய்து கொள்வது … Read more

இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசல் வினியோகம்

கொழும்பு : இலங்கையில் கடுமையான அன்னியச்செலாவணி தட்டுப்பாடு உள்ளது. இதன்காரணமாக இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அந்த நாட்டுக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை நேற்று வினியோகம் செய்தது. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ” இலங்கையின் உறுதியான பங்காளி மற்றும் உண்மையான நண்பனாக இந்தியா உள்ளது. இந்திய தூதர் … Read more

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20 போட்டி – இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

கொல்கத்தா: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.  இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20  போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது.  சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு … Read more

தலைப்பாகை அணிபவர் எல்லாம் சர்தார் ஆக முடியாது – மோடி, கெஜ்ரிவால் குறித்து பிரியங்கா காந்தி பேட்டி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். பின்னர் அமிர்தசரஸ் நகரில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மற்றும் கெஜ்ரிவால் பஞ்சாப் வந்தால் மேடையில் டர்பன் (தலைபாகை) அணிந்து இருப்பார்கள். மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள். உண்மையான சர்தார் யார் என்று அவர்களிடம்  (மோடி, கெஜ்ரிவால்) சொல்லுங்கள். இந்த தலைப்பாகையின் … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 159 ரூபாய் 86 பைசாவாக உள்ளது.  ஒரு லிட்டர் டீசல் விலை 9 ரூபாய் 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல்  154 ரூபாய் 15 காசுகளுக்கு விற்கப்படுகிறது.  மண்ணெண்யை விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணை விலை 10 ரூபாய் … Read more

அஜித்தின் அடுத்த படத்தின் புதிய லுக் – தீயாய் பரவும் புகைப்படம்

சென்னை: வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்படத்தையும் (ஏகே 61) வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனிக்கபூர் வெளியிட்டுள்ளார். காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வித்தியாசமான லுக்குடன் அஜித் இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.  அந்த கெட்டப்பில் தான் … Read more

ஹிஜாப் மோதல் : கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தும்கூர்: ஹிஜாப் விவகாரம் காரணம் கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த 10 வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகள் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்திருந்தார். நாளை மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தும்கூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தும்கூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  … Read more

ரஷ்யாவுடனான போர் பதற்றம் – இந்தியாவின் அணுகு முறைக்கு நன்றி தெரிவித்தது உக்ரைன்

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் மற்றும் உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை கடினமானது. ஆனால் சிக்கலானது அல்ல. எங்களது நட்பு … Read more