நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: பணம் வழங்குவதை தடுக்க கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைப்பு

சென்னை: சென்னை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு பணி தொடர்பாக,  மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு  உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் வீதம் 45 பறக்கும் படை குழுக்கள் ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளன.  ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000/-க்கு … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதால் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார் – சோனிபட் காவல்துறை விளக்கம்

பல்வால்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர். இந்த போராட்டத்தை தூண்டியதாக பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலமான தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில்  தீப் சித்து உயிரிழந்தார்.  குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் பிப்லி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி  மீது தீப் சித்து … Read more

உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவி – கனடா முடிவு

ஒட்டாவா: உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்த செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு இராணுவ … Read more

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 12,309 பயனாளர்களுக்கு ரூ.34 கோடி நிவாரணம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த, காப்பீடு செய்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ கொரோனா நிவாரண திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டம்  2022 மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும்.  ஆனால் தற்போதுள்ள அனைத்தும் பயனாளிகளுக்கும் பயன்கள் தொடரும்.  இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த இறந்த தொழிலாளியின் சராசரி சம்பளத்தில், 90 சதவீதம் தகுதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.  கொரேனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் … Read more

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த மதரஸா ஆசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக மதரஸா பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.  குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஸ்வாலிஹ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியரை கைது செய்து காவலில் வைத்தனர். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 11க்கும் குறைவான வயதுடையவர்கள்.அந்த குழந்தைகளிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் … Read more

டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து மரணம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தின்போது செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் திரைப்பட நடிகர் தீப் சித்து, சாலை விபத்தில் உயிரிழந்தார். அரியானாவில் உள்ள மேற்கு புற விரைவுச்சாலையில் இன்று நிகழ்ந்த விபத்தில் அவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள், கடந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசுத் தினத்தன்று, டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதிகளின் வீட்டில் காணலாம்: ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராஜ்புராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார். தலைவர்களின் முகத்தைப் பார்த்து ஏமாறாமல், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் “மறைந்திருக்கும் சக்திகளை” புரிந்து கொள்ள அவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் ராகுல் காந்தி … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து முகாம்களுக்கு திரும்பும் ரஷிய படைகள்

மாஸ்கோ: முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடான ரஷியா இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷியா போர் … Read more

ரெயில்வே கேட் மூடியிருக்கையில் அலட்சியமாக கிராசிங்… நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்

மும்பை: இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரெயில் வந்ததால் பைக்கை தண்டவாளத்தில் போட்டுவிட்டு ஓடியதால் வாலிபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார். அப்போது ரெயில் அதிவேகமாக வருவதை கண்ட அவர், தண்டவாளத்திலேயே பைக்கை போட்டுவிட்டு எகிறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அவரது பைக் மீது ரெயில் பயங்கரமாக … Read more

அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயார்- புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா, படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இந்த நெருக்கடி குறித்தும், எல்லையில் படைகள் … Read more