போர் பதற்றம்: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உக்ரைன் போர் பதற்றம் மற்றும் அங்குள்ள இந்தியர்களை மீட்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா எந்த நிமிடமும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இரு நாட்டு எல்லையில், குறிப்பாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கவலை அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த … Read more

மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநில அரசுகளை கவிழ்க்க சதி நடக்கிறது: சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி

மும்பை: மகராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்காக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவதாகவும், இந்த அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் அவர் கூறினார். “பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு … Read more

அண்ணாமலை எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிறார்- கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:- தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது.  இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி ஜி.ஆர். சுப்பிரமணியம் வழக்கை சி.பி.ஐ. … Read more

பாறை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட வாலிபர் மீது வனத்துறை வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் குரும்பாச்சி மலை பகுதி உள்ளது. செரடு பகுதியை சேர்ந்த பாபு என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ந் தேதி மலைக்கு சென்றார். மலையேறும்போது கால் வழுக்கி தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் சிக்கி கொண்டார். அவருடன் சென்ற நண்பர்கள், இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று பாபுவை மீட்க முயன்றனர். ஆனால் பாபு சிக்கி இருந்த பகுதி ஆபத்தான பாறை … Read more

திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது- பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். எனவே, தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக … Read more

ம.பி முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஷிவ்ராஜ் சிங் கவுகான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- தொற்று அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டேன். அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனக்கு சாதாரண அறிகுறிகளே உள்ளன. அதனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது பணிகளை காணொளி மூலம் செய்வேன். நாளை நடைபெறவுள்ள சந்த் சிரோமணி ரவிதாஸ் … Read more

ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றம்: நாட்டைவிட்டு வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி அங்குள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் … Read more

நீட் விவகாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. பொதுவிவாதம் நடந்தால் நானும் தயார்: அன்புமணி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முதலாக நடக்கும் தேர்தலில், உறுதியாக மேயராக பா.ம.கவை சேர்ந்தவர் வருவார். காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மேயராக பா.ம.க. வெற்றி பெற்றவுடன், போடும் முதல் கையெழுத்து டாஸ்மாக் இல்லாத நகரமாக மாற்றுவது ஆகும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் நீட் வர அ.தி.மு.க. தான் … Read more

தோரந்தா கருவூல ஊழல் வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு- நீதிமன்றம் அதிரடி

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ல் 3 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருக்கும் லாலு பிரசாத், உடல்நலக் குறைவு காணமாக ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில் தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி ஊழல் செய்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. அப்போது தீர்ப்பை ஒத்திவைத்து … Read more

பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் குறைகிறது- அமெரிக்க ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவியதால் தடுப்பூசியின் 3-வது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசியின் 3-வது டோஸ் செலுத்தப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் கணிசமாக குறைகிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி … Read more