வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவலுக்கு இடையே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதற்காக மாணவர்களை தயார்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் கற்றல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது. காலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வை எப்படி … Read more

ராகுல் காந்தியின் ட்வீட் பதிவுக்கு எதிராக 1000 பேர் போலீசில் புகார்- பாஜக

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10-ம் தேதி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், எங்கள் ஒன்றியத்தில் பலம் உள்ளது. நமது கலாச்சாரங்களின் ஒன்றியம். எங்கள் பன்முகத்தன்மை ஒன்றியம். எங்கள் மொழிகளின் ஓன்றியம். எங்கள் மக்கள் ஒன்றியம். நமது மாநிலங்களின் ஒன்றியம். காஷ்மீர் முதல் கேரளா வரை. குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள.. என்று குறிப்பிட்டிருந்தார். இந்த … Read more

உக்ரைன் மீது போர் தொடுக்க தயார் நிலையில் ரஷ்யா – வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்

மாஸ்கோ: முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனாலும், ரஷ்யா எந்நேரத்திலும் … Read more

உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 56,405.84 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 265 புள்ளிகள் உயர்ந்து 56,731 புள்ளிகளுடன் வர்த்தகமானது. பங்குச்சந்தையின் இடையில் அதிகபட்சமாக 550 புள்ளிகள் உயர்ந்து 56,955.09 வர்த்தகமானது. குறைந்சபட்சமாக 56,539.32 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தற்போது 10 மணி நிலவரப்படி வர்த்தகம் சென்செக்ஸ் புள்ளிகள் 210 புள்ளிகள் உயர்ந்து 56,615.95 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதபோல் தேசிய பங்குசந்த்தையில் நிஃப்டி இன்று காலை … Read more

நான் பயங்கரவாதி இல்லை, ஒரு மாநில முதல் மந்திரி – சரண்ஜித் சிங் சன்னி ஆவேசம்

லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014-ல்  இளவரசருக்காக (ராகுல் காந்தி) எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது. நான் பதான்கோட் மற்றும் இமாசல பிரதேசம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், எனது ஹெலிகாப்டர் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இளவரசர் அமிர்தசரஸில் இருந்ததால் எனக்கு … Read more

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

லண்டன் : இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கொரோனா தொற்றிய நிலையில், தற்போது 2-வது முறையாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் சார்லசின் மனைவியும், இளவரசியுமான கமிலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று … Read more

10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு: மேலும் ஒரு வினாத்தாள் கசிந்தது

சென்னை: தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இப்போது நடந்து வருகிறது.   திருவண்ணாமலையில் 14-ம் தேதி நடக்கவிருந்த 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வும், பிளஸ்2-க்கு கணிதத் தேர்வும் வினாத்தாள்கள் வெளியானதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வினாத்தாள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். … Read more

சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை இன்று அறிவிப்பேன்: சஞ்சய் ராவத்

மும்பை : மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் தன்னை அணுகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய முகமைகளின் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் அதற்கு பயப்படபோவதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் அஞ்சப்போவதில்லை. இதேபோல சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே குடும்பத்தின் மீது கூறப்படும் பொய்யான … Read more

எல்லைப் போராட்டம் எதிரொலி – 50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமல்

கனடா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் … Read more

ஜிம்பாப்வே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக  அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.  பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது. எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1, 40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் … Read more