கச்சா பாமாயிலுக்கான விவசாய வரி குறைப்பு – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: உலகளவில் சமையல் எண்ணெய்களின் விலைகள் அதிகரிப்பால், உள்நாட்டு சமையல் எண்ணெய்களின் விலைகள் மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் வகையில், கச்சா பாமாயிலுக்கான விவசாய வரியை  7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. விவசாய வரி குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மற்றும் சுத்தி கரிக்கப்பட்ட பாமாயிலுக்கும் இடையேயான இறக்குமதி வரி இடைவெளி, 8.25% ஆக அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு சுத்திகரிப்புத் … Read more

ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு – 12 குழந்தைகள் உயிரிழப்பு

குண்டூஸ்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.  ஆப்கானிஸ்தான் அரசாங்க சொத்துக்கள் முடக்கம் மற்றும் தாலிபான் மீதான சர்வதேச தடைகள், வெளிநாட்டு உதவி நிறுத்தம், ஆகியவற்றால் அந்நாட்டு மக்கள் கடும் வறுமையில் சிக்கியுள்ளனர்.  அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆப்கானிஸ்தானில்  10 லட்சம் குழந்தைகள் உணவின்றி உயிரிழக்கும் அபாயம் நீடிப்பதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில் குண்டூஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு … Read more

நாளை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் 20 ஓவர் போட்டி: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

கொல்கத்தா: ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.  இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான  20 ஓவர் போட்டித் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.  இந்நிலையில் பிப்ரவரி 18 மற்றும் … Read more

மேகதாது அணை திட்டம் – தமிழகத்தின் எதிர்ப்பில் நியாயமில்லை என்கிறார் தேவகவுடா

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை  இணை மந்திரி அஸ்வினி குமார், மேகதாது அணை  கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக  முடிவு எட்டப்பட்டால்  மட்டுமே … Read more

பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை செய்யப்பட்ட வழக்கு – சகோதரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்

லாகூர்: பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆணாதிக்க கொள்கைகளை எதிர்த்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக் களையும் வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தள நட்சத்திரமாக கருதப்பட்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன குவான்டீல் பலூச், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு பிணமாக கிடந்தார்.  குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் அவரை கழுத்தை நெறித்து கொன்று விட்டதாக பலூச்சின் சகோதரர் முகமது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில்  … Read more

புதிய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அடிக்கல்: கங்குலி, ஜெய் ஷா பங்கேற்பு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதான வளாகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படுகிறது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடிக்கல்லை நாட்டினர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் துமால், இணைச் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ், … Read more

எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை – மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா:  மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.  ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் சந்திப்பு டெல்லிக்கு வெளியே நடைபெறும் என்று மம்தா பானர்ஜி உடனான தொலைபேசி உரையாடலுக்கு பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்த சந்திப்பில் … Read more

ஜிம்பாப்வே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் இடை நீக்கம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக  அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.  பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது. எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1, 40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் … Read more

பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி – முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

மதுரை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல் மயமாக்கிய அதிமுகவிற்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கவே யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை. மதுரைக்கு மோனோ இரயில் என்று சொன்னார்கள். எங்கே அது ஓடுகிறது?  முத்துராமலிங்கத் தேவர் சிலையருகே பறக்கும் பாலம் என்று கூட சொன்னார்கள். பறக்கும் பாலம் ஏதாவது … Read more

கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 173 கோடியை தாண்டியது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் பயனாளர்களுக்கு போட ப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணக்கை 173 கோடியே 38 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இதுவரை 5 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், ஒரு கோடியே 63 லட்சம் பேர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார மந்திரி … Read more