எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எல்.ஐ.சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய – முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று. ஒரு நல்லரசு என்பது … Read more

பாடல் ஒலிப்பரப்புவதில் ஏற்பட்ட மோதல்: திருமண வீட்டில் குண்டு வீசி வாலிபரை கொன்ற கும்பல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தோட்டடா பகுதியில் உள்ள ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்தது. திருமண வீட்டில் ஒலி பெருக்கி கட்டி பாடல்கள் ஒலிப்பரப்பபட்டது. அப்போது அங்கு வந்த சிலர், பாடல்களை சத்தமாக வைக்க கூடாது என்று கூறினர். இதனால் திருமண வீட்டில் இருந்தவர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை மூண்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி மோதல் மூண்டது. அப்போது அங்கு ஒரு கும்பல் வேனில் வந்தனர். அதில் இருந்து … Read more

பிலிப்பைன்ஸ் மந்திரியுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்தது – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

மணிலா: இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் பேசினார். பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை மந்திரி … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,634 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 2,296 ஆக இருந்த நிலையில் இன்று 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 341 … Read more

கோவாவில் 78 சதவீதம், உத்தரகாண்டில் 59 சதவீத வாக்குப்பதிவு

பனாஜி: 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது. பகல்  1 மணி நிலவரப்படி கோவாவில் 44.63 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 35.21 சதவீத … Read more

போர் மூண்டால் உக்ரைன் அகதிகளை ஏற்க தயாராகும் போலந்து

வார்சா: ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கேட்டுக்கொண்டார். அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று … Read more

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது- ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர். பாடல் வெளியான 10 நிமிடங்களில் … Read more

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலம் கிரா டாடி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன், சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. டாலியில் இருந்து நேற்று மாலை பாலின் நோக்கி சென்றபோது குமே பாலத்தின் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்துள்ளது. இதில், வேனில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த முதல்வர் பேமா காண்டு, வேதனை தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் … Read more

லண்டன் சொகுசு பங்களாவை மீட்க விஜய் மல்லையா முயற்சி

லண்டன்: இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி விட்டு அதனைதிருப்பி செலுத்தாமல் மோசடிசெய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற … Read more

செல்போன் தொடர்புகளால் சீரழிந்த வாழ்க்கை- 2 சிறுமிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்

சென்னை: கொரோனா பரவலுக்கு பிறகு மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே நடைபெற்று வந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் செல்போன்கள் மூலமே நடத்தப்பட்டன. இதனால் மாணவ- மாணவிகளின் கைகளில் எப்போதும் செல்போன்கள் தவழ்வது தவிர்க்க முடியாததாகவே மாறிப்போய் இருந்தது. இதனை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் தவறான வழிகளில் செல்வதும் தற்போது அதிகரித்துள்ளது. செல்போன்கள் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு மாணவிகள் பலர் வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து … Read more