வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்- பஞ்சாப் மாநிலத்தில் மோடி பிரசாரம்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என … Read more

மதத்தை அவமதித்ததாக ஒருவரை அடித்து கொன்ற கும்பல்- 80 பேர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த ஆலை மேலாளர் பிரியந்தகுமாரா என்பவரை கும்பலாக சேர்ந்து அடித்து கொன்றனர். பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் கானேவால் மாவட்டத்தில் மதத்தை அவமதித்ததாக கூறி ஒருவரை பலர் கும்பலாக சேர்ந்து … Read more

காதலர்கள் போல் தனியாக சென்று வாக்கு சேகரியுங்கள் – வேட்பாளர்களுக்கு ஐடியா கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

குடியாத்தம்: குடியாத்தத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். தமிழ்நாட்டில் வரும் 25 ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி இருக்கும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 6 மாதங்கள் கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் மீண்ட உடன் பெருவெள்ளம் இப்படியே 8 மாதம் கழிந்து விட்டது. 6 மாத பட்ஜெட் தான் போட்டுள்ளோம், இனி வரும் நாளில் முழு … Read more

பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க ரூ.75 லட்சம் செலவு

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23 ). மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட பாபு, கடந்த 7-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் செங்குத்தான பாறை ஒன்றின் இடையே சிக்கி கொண்டார். அங்கிருந்தபடி தன்னை மீட்கும்படி வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

எல்லையில் போர் பதற்றம்: உக்ரைனுக்கு விமான போக்குவரத்து ரத்து

கீவ்: ரஷியா – உக்ரைன் நாடுகள் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்த படியே இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடி மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தூதரகங்களும் … Read more

பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் அடிபட்ட நச்சு பாம்புகள்- கே.எஸ். அழகிரி தாக்கு

சென்னை: சென்னை மாநகராட்சி  தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பெரம்பூர் பகுதியில் 37-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் டில்லி பாபுவுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் அடிபட்ட நச்சு பாம்புகள். ஆனால் இன்னும் உயிர் இழக்கவில்லை. பா.ஜனதா இந்தியாவுக்கே ஆபத்தான கட்சி. அ.தி.மு.க. தமிழகத்துக்கு ஆபத்தான … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் நீரியல், வெள்ளம் ஆகியவற்றிற்காக அனைத்து வானிலை நிலைகளிலும் உயர் படங்களை இ.ஓ.எஸ்.-04 செயற்கைகோள் அனுப்பும் என்று தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்…தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்- … Read more

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டடுவிட்டர் செய்தியில், 2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த … Read more

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி-52 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-4-ஐ சிறப்பாக உருவாக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43). தி.மு.க. நிர்வாகியான இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக முத்தையா அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த அவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் முத்தையா மற்றும் கட்சியினர் காலை முதலே தீவிர பிரசாரத்தில் … Read more