ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட காஷ்மீர் மாணவிக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீநகர்: காஷ்மீரை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். பிளஸ்-2 படித்து வந்தார். காஷ்மீ ரில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியானது. இதில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார். இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் ஹிஜாப் அணியவில்லை. அவர் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள், … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

சென்னை : தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது. தற்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் உள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று, … Read more

கோவா, உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பனாஜி: கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற … Read more

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புனே: இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள்   குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புனே மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இராணுவம்-இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்  பலதரப்பு பயிற்சிகள், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக … Read more

உத்தரகாண்ட், கோவாவில் இன்று தேர்தல் – ஒரே கட்டமாக நடை பெறுகிறது

டேராடூன்: ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தலில் இன்று உத்தரகாண்ட், கோவா மாநிங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் மொத்தம் உள்ள  70 சட்டசபைத் தொகுதிகளில்  152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.  தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 11,697 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.  அந்த மாநிலத்தில் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.  கொரோனா கட்டுப்பாடுகளுடனும், … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து

ஹூப்ளி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர்.  இதனால் அந்த மாநிலத்தில் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை ராஜஸ்தானிலும் … Read more

கர்நாடகாவில் பள்ளிகள் இன்று திறப்பு – போலீஸார் கொடி அணி வகுப்பு

ஷிவமோகா: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை சுற்றி இன்று காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அறிவிப்பை அடுத்து  கர்நாடகாவில் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.  இதையொட்டி பதற்றத்தை தணிக்கும் வகையில், ஷிவமோகாவில் போலீஸார் கொடி … Read more

பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இம்ரான்கான் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர்.  அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு … Read more

பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு

டோக்கியோ:  ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள  கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.  சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம்  காணாமல் போனது. இதையடுத்து அதை தேடும் பணிகளை ஜப்பான் முப்படைகளும் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் ஒரு உடல் கண்டு பிடிக்கப் பட்டதாக ஜப்பான் … Read more

உத்தரபிரதேசத்தில் வாக்கு எந்திரங்கள் இருக்கும் அறையை காவல் காக்கும் சமாஜ்வாடி வேட்பாளர்கள்

லக்னோ: 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடந்தது. இதில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிக்கு தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் பதிவான எந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன. அங்குள்ள அறைகளில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எந்திரங்கள் இருக்கும் … Read more