41 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்துக – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: கடந்த 12ம் தேதி 2 இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், மறுநாள் அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் … Read more

ஒயின் விற்பனைக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.  இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் … Read more

உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

லண்டன்: உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது … Read more

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வை முதலில் நடந்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அநீதி. ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் … Read more

70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … Read more

நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- புதிதாக 810 பேர் பாதிப்பு

கொரோனா தொற்று பரவல் ஒரு சில நாடுகளில் குறைந்து வந்தாலும். நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 9ம் தேதி 334, 10ம் தேதி 476, 11ம் தேதி 464 என பதிவாகியருந்தது. இந்நிலையில், நியூசிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மட்டும் 623 பேருக்கு கொரோனா … Read more

குமாரபாளையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீர் மாயம்

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கொக்கராயன்பேட்டை ஆலங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு தாசின் (26) என்ற மனைவியும், கிகனா (8) என்ற மகளும், சையத் கலாம் (7) என்ற மகன், முகமது உசேன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளனர். நசீருக்கும், தனது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தாசின் கோபித்துக்கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. … Read more

ஒடிசா பஞ்சாயத்து தேர்தல்: வேட்பாளர்களுக்கு பரீட்சை வைத்த கிராம மக்கள்

புவனேஸ்வர்: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள குத்ரா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த பதவிக்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 9 வேட்பாளர்களில் 8 பேர் தேர்வை எழுத ஒப்புக் கொண்டனர். அதன்படி அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு 7 கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களுக்கு பதில் அளிக்க 30 … Read more

வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்

விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். இதன் முடிவில், ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதரமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறப்பட்டுள்ளதாவது:- … Read more

ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு – உடுப்பி மாவட்டத்தில் நாளைமுதல் அமல்

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார். இதையொட்டி பள்ளிகளை … Read more