பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது

புதுடெல்லி: பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10-ந் தேதி இணைக்கப்பட்டன. 2-வது கட்டத்தில் 3 … Read more

14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர் – பொறி வைத்து பிடித்த லண்டன் போலீஸ்

திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டில் 14 வயதான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதில் ஈடுபடுவோர், சிறுமிகளுக்கு சமூக வலை தளங்கள் மூலம் அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இது பற்றியும் போலீசாருக்கு தகவல்கள் சென்றன. இதன் அடிப்படையில் வலைதளங்களில் சிறுமிகளை செக்ஸ்-க்கு அழைப்போரை லண்டன் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் கேரளாவில் இருந்து லண்டனுக்கு மேற்படிப்புக்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமிகளை செக்சுக்கு அழைத்தது … Read more

ஒரே நாடு… ஒரே ரேசன் கார்டு… என்பவர்கள் ஒரே குளம்… ஒரே சுடுகாடு… கொண்டு வாருங்கள்: சீமான்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- தேர்தலுக்கு என்று தமிழக மாநிலத்திற்கு எவ்வளவு நீதி ஒதுக்குகிறீர்கள். தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடாக சட்டசபை தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஓதுக்கிறீர்களோ அதே … Read more

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக திகழும் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம். நேற்று சில இளைஞர்கள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்தனர். திடீரென அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்று ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது அந்த வழியாக மெகுனிபூரில் இருந்து ஹவுராவுக்கு ரெயில் வந்தது. தண்டவாளத்தில் இளைஞர்கள் கூட்டமாக இருப்பதை … Read more

பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை விரட்டிய ரஷ்ய போர் கப்பல்

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பலை ரஷ்ய போர் கப்பல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:- பசிபிக் கடலில் உள்ள குறில் தீவுகளுக்கு அருகே ரஷ்யாவின் போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்ட போது அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய கடல் பகுதியில் கண்டுபிடித்தது. அந்த நீர்மூழ்கி கப்பல் தாங்கள் விடுத்த கோரிக்கையை … Read more

ஐ.பி.எல். ஏலம்: ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு உள்ளது?- எத்தனை வீரர்களை எடுத்துள்ளது- முழு விவரம்

ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனார்கள். இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியிடம் இருக்கும் தொகை 1. சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது. 2. டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 … Read more

ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்ததுபோல் கெஜ்ரிவால் பஞ்சாபைக் கொள்ளையடிக்க வந்துள்ளார்- சன்னி கடும் விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றிப்பெரும் முனைப்புடன் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் … Read more

கோவா மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கோவா மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு டெல்லிமுதலமைச்சரும்,ஆம்ஆத்மிஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : மார்ச் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 11-ம் தேதிக்குள் காங்கிரஸில் இருந்து அனைவரும் பாஜகவில் சேருவார்கள்.எனவே பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கோவா மக்கள், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  காங்கிரசுக்க நீங்கள் அளிக்கும் வாக்கு வீணாகி, பாஜகவுக்குத்தான் போகும். உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு அளிக்க வேண்டும். … Read more

பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.200 ஐ தாண்டும் – அகிலேஷ் யாதவ் பேச்சு

படவுன்: உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் படவுன் மற்றும் ஷாஜஹான்பூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200 ஐ தாண்டும்.  ஏழைகள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர்களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக்கிள் அல்லது கார் கூட சொந்தமாக இல்லை. பா.ஜ.க.வின் சிறிய … Read more

ஸ்பெயினில் கொடூரம் – குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன் கைது

மாட்ரிட்:  ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து   20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  15 வயது பள்ளி மாணவன் தேர்வில்  குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். தொடர்ந்து 3 … Read more