ஐபிஎல் மெகா ஏலம் – இரண்டாவது நாளாக இன்று காலை நடை பெறுகிறது

பெங்களூரு: 15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன.  இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன. வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாம் நாளாக … Read more

இடிந்து விழுந்த பாதாள கால்வாய் – சிக்கி தவித்த தொழிலாளர்களில் 5 பேர் மீட்பு

ஸ்லீமனாபாத்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள ஸ்லீமனாபாத் என்ற இடத்தில் நர்மதா நதி வலது கரையில் பர்கி பாதாளக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.  நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவால் பாதாளக் கால்வாய் இடிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  #WATCH | Of the 9 labourers trapped, … Read more

புரோ ஹாக்கி லீக் – இந்தியாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

போட்செஃப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸை எதிர்கொண்டது. ஏற்கனவே முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பிரான்சை 5-0  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்து.  நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்க தவறினர்.  ஆட்டத்தின் முடிவில் 2-5 … Read more

கோவா சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நிறைவு – நாளை வாக்குப் பதிவு

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அங்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கோவா சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இந்த முறை 332வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உத்தர பிரதேச சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் … Read more

உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா – ரஷ்யா அதிபர்கள் பேச்சு வார்த்தை

வாஷிங்டன்: ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை … Read more

புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி

பெங்களூரு: 8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில்  32-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி லீக் புள்ளி பட்டியலில்  2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில்  யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் 37-27 … Read more

தொழிலாளர்களின் நலனில் மோடி அரசு அக்கறை கொண்டுள்ளது – மத்திய மந்திரி உறுதி

குர்கிராம்: குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.சி) கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் பேசியதாவது: காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அடிப்படையில் நாட்டில்வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழி லாளர்களின் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தொழிலாளர்களின் தொடர் உடல்நலப் பரிசோதனைக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் ஒருங் கிணைக்கப்படும். மொத்தம் 15 நகரங்களில் பரிசோதனை முறையில் … Read more

ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ள வீரர்கள் விவரம்

பெங்களூர்: ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. தீபக் சாஹர் – ரூ. 14 கோடி அம்பதி ராயுடு – ரூ. 6.75 கோடி டிவைன் … Read more

தடுப்பூசிக்கு எதிராக பொய் பிரசாரம் செய்த காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் – பிரதமர் மோடி

ருத்ராப்பூர்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:  கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தோம். ஏழைகளுக்கு பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேசன் பொருள் உள்ளிட்ட பல திட்டங்கள் வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், தங்களுக்கு கிடைத்திருக்காது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பெருந்தொற்று காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் வெறும் வயிற்றுடன் உறங்க நாங்கள் … Read more

சிங்கப்பூர் விமான கண்காட்சி – இந்திய போர் விமானம் பங்கேற்பு

சாங்கி: சர்வதேச விமான தொழில்துறை சார்பில் நடத்தப்படும் சிங்கப்பூரில் விமான கண்காட்சி வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   இரண்டாண்டுக்கு ஒருமுறை சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை  காட்சிப்படுத்த இந்த கண்காட்சி வழிவகுத்துள்ளது. நடப்பாண்டு கண்காட்சியில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப் படுத்தவுள்ளது.   தேஜாஸ் விமானம் அதன் சிறந்த கையாளுதல் பண்புகள் மற்றும் திறனை வெளிப்படுத்தும்  … Read more