தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை:     தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,086 ஆக பதிவாகி இருந்தது.   இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 2,812 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. … Read more

பாத யாத்திரை, கூடுதலாக 4 மணி நேரம் பரப்புரைக்கு அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. உ.பி.யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 10-ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகண்ட், கோவாவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதியும், பஞ்சாப்பில் பிப்ரவரி … Read more

முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.க.செல்வம். தி.மு.க.வை சேர்ந்த இவர் 2020, ஆகஸ்டு 4-ம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். தகவலறிந்த தி.மு.க. அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தாலும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கு.க.செல்வம் தியாகராயநகரில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு … Read more

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்

மும்பை:  பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார் (83). அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் இருந்த போது அவரது உயிர் பிரிந்ததாக பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார். இதையும் படியுங்கள்…முகக்கவசம் என்பது காரில் சீட் பெல்ட் அணிவதற்கு சமமானது- சுகாதார நிபுணர்கள் கருத்து

ராஜஸ்தான், டெல்லியுடன் மல்லுக்கட்டி தீபக் சாஹரை 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே

பெங்களூர்: ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2021-ம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தீபக் சாஹர் விளையாடி வந்தார். 80 லட்சத்துக்கு எடுக்கப்பட்டிருந்த சாஹருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. ராஜஸ்தான், டெல்லி, சென்னை, ஆகிய அணிகள் மல்லுக்கட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 14 கோடிக்கு எடுத்தது. இஷான் கிஷானுக்கு … Read more

ராகுல் பஜாஜ் மறைவு – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

புதுடெல்லி: பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் (83), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராகுல் பஜாஜ் இன்று பிற்பகல் காலமானார்.  இந்நிலையில், தொழிலதிபர் ராகுல் பஜாஜின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவரது தொழில் வாழ்க்கை நாட்டின் பெருநிறுவனத் துறையின் எழுச்சி மற்றும் உள்ளார்ந்த வலிமையைப் … Read more

தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முழு விவரம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர்  வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-2-2022 அன்று 3086 ஆக குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் … Read more

சத்தீஸ்கர் என்கவுண்டர் – சி.ஆர்.பி.எப். அதிகாரி உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் பசகுடா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த புத்கல் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என சி.ஆர்.பி.எப்  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சி.ஆர்.பி.எப். போலீசாரை நோக்கி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 168-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.  வீரர் ஒருவர் காயமடைந்தார் என பஸ்டார் நகர ஐ.ஜி. சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். … Read more

சீனா நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

மெல்போர்ன்: குவாட் அமைப்பின் 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா சவாலை எதிர்கொள்வது மற்றும் பிற நாடுகளுக்கு குறிப்பாக தடுப்பூசிகள் மூலம் உதவுவது போன்ற அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டோம். ஆஸ்திரேலிய அரசு எல்லையை திறப்பதை நான் வரவேற்கிறேன். இது இந்தியாவில் திரும்பி வருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், பிரிந்த … Read more

11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் … Read more