சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நாடகம் மீண்டும் ஒளிபரப்பு- கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்கை வரலாற்று இசை நாடகத்தை ஒளிபரப்ப டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து குழந்தைகளின் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் விதத்தில் டெல்லி அரசு முயற்சி எடுத்துள்ளது. நாடகத்தை மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படும் என்றும் மக்கள் அனைவரும் இலவசமாக காண வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 4-ம் … Read more

தைவானில் கடும் நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியன் கவுண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக சீன நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலேயே முதன்முறையாக 2 மாநகராட்சி மேயர்களை பெறப்போகும் தஞ்சை மாவட்டம்

தஞ்சாவூர்: தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 22-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. தொடர்ந்து அடுத்த மாதம் 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 மேயர், 2 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதாவது தமிழகத்தில் … Read more

திருமண மேடையில் மூளைச்சாவு: மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோருக்கு குவியும் பாராட்டு

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம்  ஸ்ரீநிவாஸ்பூரில் சைத்ரா (25) என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சைத்ராவும், மணப்பெண்ணும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சைத்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். மூச்சுப் பேச்சற்று கிடந்த சைத்ராவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சைத்ராவின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர், சைத்ராவின் உடல் … Read more

ஜப்பான் தொழிற்சாலையில் தீ- 4 தொழிலாளர்கள் பலி

டோக்கியோ: ஜப்பானில் வடகிழக்கு பகுதியான நிஜிகாடே என்ற இடத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் 22-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 … Read more

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- … Read more

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு- சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்

பெங்களூரு: கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை … Read more

2-வது மனைவியை விவாரத்து செய்த நாளில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 49 வயது அரசியல் பிரமுகர்

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். இவருக்கு 49 வயதாகிறது. இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்திருந்தார். 2-வது மனைவி கடந்த புதன்கிழமை ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். உடனடியாக, லியாகத் 18 வயதான இளம் பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அவர் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள லியாகத், … Read more

ஊரடங்கு தளர்வுகள்- சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதன் எதிரொலியால், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. … Read more

ராகுல், பிரியங்காவை கிண்டலடித்த நிதி மந்திரி: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி : பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பாராளுமன்ற மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2013-ம் ஆண்டு, அலகாபாத்தில் வறுமை என்பது ஒரு மனநிலை என கூறியதாக கேலி செய்தார். இதுபற்றி காங்கிரசாரைப் பார்த்து நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘உங்கள் முன்னாள் தலைவர் வறுமை என்றால் உணவு, பணம் அல்லது பொருள்பற்றாக்குறை என்று அர்த்தம் அல்ல. ஒருவருக்கு தன்னம்பிக்கை இருந்தால் … Read more