ஊழல் குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் கைது- பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. காங்கிரசை பின்னுக்கு தள்ளி அபார வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஆம் ஆத்மி ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டு நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டதாக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விஜய் சுங்லா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெண்டர்கள் மற்றும் கொள்முதலில் ஒரு சதவீத கமிஷன் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது. … Read more