பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்

இஸ்லாமபாத் : பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் இம்ரான்கான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக … Read more

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.  இந்த சாதனை மிக … Read more

விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் இல்லை – மத்திய விவசாயத்துறை மந்திரி உறுதி

புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து  மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.  விவசாயிகள் போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு போன்றவை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் உள்ளது. பிப்ரவரி 8, 2022 நிலவரப்படி, 11.78 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளிகளுக்கு பல்வேறு தவணைகள் மூலம் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி நிதிப் பலன்கள் வழங்கப் … Read more

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தானை பயன் படுத்தக் கூடாது – குவாட் அமைப்பு வலியுறுத்தல்

மெல்போர்ன்: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற குவாட் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த மாநாட்டில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தோ … Read more

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரத்தை கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது – ராகுல் காந்திக்கு அசாம் முதல்வர் கேள்வி

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அசாம் முதமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பேசியதாவது: பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா?  மறைந்த ஜெனரல் பிபின் ராவத் தலைமையில் பாகிஸ்தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் கூறுகிறது. … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு

வாஷிங்டன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது: உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இரவு 10 மணி வரை பிரசார செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை,  வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.  இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  காலை 6 மணி முதல் இரவு 10 … Read more

பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு சாலை வழிக்கு பதில் ஹெலிகாப்டரில் வரலாம் – காங்கிரஸ் எம்.பி. பேட்டி

அமிர்தசரஸ்:  கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.அவர் சாலை வழியே வாகனத்தில் சென்ற போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் தமது பயணத்தை பிரதமர் ரத்துச் செய்தார்.  இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலையொட்டி … Read more

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிக்கு விராட்கோலி கையெழுத்திட்ட பேட் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு  சென்று அதனை பார்வையிட்டார்.  அவருடன் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பெய்னும் சென்றிருந்தார். அப்போது விராட்கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை  ஜெய்சங்கர் மரிஸ் பெய்னுக்கு பரிசாக வழங்கினார் பின்னர் இது குறித்து தமது ட்விட்டர் பதிவில் நியாயமான … Read more

பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார். அவரது தந்தை அப்துல்கான் ஒரு தொழிலாளி ஆவார். பகவத்கீதை வினாடி- வினா போட்டியில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி குஷ்பு கூறியதாவது:- எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் பகவத் கீதை போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார்கள். பிற மதங்களின் இதிகாசங்களை பற்றி அதிகம் தெரிந்து … Read more