திடீரென முடங்கியது டுவிட்டர் வலைதளம் – அவதியடைந்த பயனாளர்கள்

உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது.  இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது, நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் … Read more

ஏழை நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது: நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.   மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 569 மாவட்டங்களில் ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் பிரதமரின் … Read more

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு பதிவு இல்லை – மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தெரிவித்துள்ளதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிடுவதாகவும், அதன்படி 2020-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,71,503 ஆகும். இவற்றில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 496 ஆகும்.  குடும்ப … Read more

கனமழை எதிரொலி – திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் … Read more

ஆந்திராவில் தமிழ் வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு பாட புத்தகம்- மு.க.ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டது

திருமலை: ஆந்திராவில் தமிழ்வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்த பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம், நகாயில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழி புத்தகம் வேண்டும் என்று எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1000 மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புத்தகங்கள் தமிழ் வழி மாணவர்களுக் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழக பாடநூல் … Read more

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு தடை நீட்டிப்பு – ஹாங்காங் அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் வைரஸ் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு … Read more

பந்துவீச்சாளர்கள் அசத்தல் – ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னும், ரிஷப் பண்ட் 56 ரன்னும் எடுத்தனர். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் … Read more

ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகம்

ஒடிசாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் முதல்முறையாக நோட்டா (விருப்பம் இல்லை) இடம்பெறுகிறது. இந்த புதிய விதியை அமல்படுத்த ஒடிசா மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசாவில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு, 107 நகராட்சிகள் மற்றும் புவனேஸ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏற்கனவே, ஒடிசா சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் வாக்காளர்களுக்கு நோட்டா வைக்கப்பட்டிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் … Read more

எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று நடைபெற்றது. கஸ்கஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பா.ஜ.க. கொடி உயரப் பறக்கிறது. இதனால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அயோத்தியில் பாரத ரத்னா பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் பிலிம் சிட்டியில் … Read more

ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.   பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்…இளவரசர் … Read more