ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14ம் தேதி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பரவலால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன.  இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து பிப்ரவரி 14-ம் தேதி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு – மாநிலங்களவை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த ஜனவரி 31-ம் தேதி பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை மார்ச் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என துணை சபாநாயகர்  அறிவித்தார். அடுத்த மாதம் … Read more

ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைகிறது

ஜோகனஸ்பர்க்: கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதல் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதற்கிடையே ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.   இது தொடர்பாக உலக சுகாதார … Read more

நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. இதனை அரசியல் ஆக்காதீர்கள்- லதா மங்கேஷ்கர் சகோதரர் வேண்டுகோள்

புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பாஜக எம்எல்ஏ ராம் கதம்,  மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பூங்காவில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று … Read more

கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி

பனாஜி: 40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க காங்கிரஸ் அரசு 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என தெரிவித்தார். இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி … Read more

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் குவாட் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

சிட்டி: உக்ரைன் மற்றும் பல்வேறு வி‌ஷயங்களில் ரஷியா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் குவாட் நாடுகளின் கூட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடக்கிறது. இந்த குவாட் நாடுகள் கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவுத்துறை மந்திரி ஹயாஷி யோஷிமாசா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வின் பகல் வே‌ஷம் முழுவதும் கலைந்துள்ளது- ஓ.பன்னீர்செல்வம்

திருச்சி: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:- கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சின்ன சறுக்கல் காரணமாக நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவாக தந்த அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. 2021 தேர்தலில் மீண்டும் நாம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் திறக்கப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு … Read more

மேற்கில் காட்டுத் தீ, கிழக்கில் கனமழை- ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கும் கடுமையான வானிலை

ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ  வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ இன்னும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிவித்துள்ளது. மேலும், சில உள்ளூர் பகுதிகளுக்குள் நுழையவும் … Read more

தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகமில்லாமல் பள்ளிக்கு வரலாம்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் மட்டுமே பயின்று வந்த மாணவ- மாணவிகளை மீண்டும் உற்சாகமாக கல்வி பயில பள்ளி கல்வி துறை முயற்சி மேற் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 6,7,8 -ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரின் கற்றல் திறனை வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   இதற்காக பள்ளி கல்வி துறை சார்பில் வருகிற 26-ந் தேதி புத்தகமில்லா தினம் … Read more