தொடர்ந்து உயராமல் இருக்கும் பெட்ரோல்-டீசல் விலை: நாளை சதத்தை தொடுகிறது

புதுடெல்லி: பெட்ரோல்-டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாறுதல் செய்து நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெற்று உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை பெட்ரோல்-டீசல் விலையை மாற்றம் செய்யும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் மிக அதிகமாக அதிகரித்தது. முக்கிய நகரங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து தினமும் … Read more

உக்ரைனில் பதட்டம் நீடிக்கும் நிலையில் பெலாரஸ் நாட்டில் ரஷியா போர் பயிற்சி

மின்ஸ்க்: சோவியத் யூனியன் கடந்த 1991-ம் ஆண்டில் சிதறிய போது அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உக்ரைன் எல்லை அருகே சுமார் 1 … Read more

லாவண்யா தற்கொலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 14-ந்தேதி விசாரணை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்த வந்த லாவண்யா என்ற மாணவி  கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மாணவி லாவண்யாவின் … Read more

தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க முழு அங்கீகாரம் அவசியம்- பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் ஏராளமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் அவசியம். அங்கீகாரம் பகுதியளவிலும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி.இ, பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க இனி முழு அங்கீகாரம் அவசியம் என அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பகுதியளவில் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், இனி தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க ஏஐசிடிஇ-ன் … Read more

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் … Read more

‘ஹிஜாப்’ விவகாரத்தில் பா.ஜனதா அரசு தோல்வி: குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு : பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் இந்த ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மோதலுக்கு வழிவகுத்து கொடுத்துள்ளன. இந்த மோதல்கள் தனியார் கல்லூரிகளில் நடக்கிறதா?. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் குழந்தைகள் யாரும் காவி கொடியை பிடித்து போராடவில்லை. அப்பாவி குழந்தைகளை … Read more

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு

திரிபோலி : லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.

ஒவ்வொரு சான்றுக்கும் லஞ்சம்?: அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

திருப்பூர் : அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் அறிவிப்பு பேனர் ஒன்றை யாரோ வைத்துள்ளனர். அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பேனரின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய … Read more

பிரபல மல்யுத்த வீரர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

புதுடெல்லி : உலக மல்யுத்த கேளிக்கை நிகழ்ச்சியால் பிரபலம் ஆனவர், ‘தி கிரேட் காளி’ எனப்படும் தலிப்சிங் ராணா. அவர் பஞ்சாப் மாநிலத்தில் போலீ்ஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தலிப்சிங் ராணா, நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். அக்கட்சி அலுவலகத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். ‘‘காளி எங்கு வசித்தாலும் அவரது இதயம் இந்தியாவில்தான் இருக்கும்’’ என்று ஜிதேந்திர சிங் புகழாரம் சூட்டினார். தலிப்சிங் ராணா … Read more

நெருக்கடி சூழ்நிலையிலும் ஆட்டத்தை கைப்பற்றும் திறன் கொண்டவர் – தோனி குறித்து அஸ்வின் புகழாரம்

ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது : ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் … Read more