திருப்பதியில் 16ந் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் – பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருமலை: உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  மேலும் திருப்பதி ஏழுமலையான் தரிசிக்க 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டது.  இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் … Read more

அகமதாபாத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

அகமதாபாத்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தன. முதல் ஒருநாள் … Read more

ஜம்மு காஷ்மீரில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் இன்று மதியம் 12.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. குல்மார்க்கில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. பிப்ரவரி 5-ம் தேதி 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், கடந்த 5 நாளில் காஷ்மீரில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது … Read more

சவுதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த, சவுதி அரேபியா மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஏமனுக்கு ராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவின் எல்லை மாகாணங்கள் மீது அடிக்கடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 17ந் தேதி அன்று அபுதாபியில் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மூன்று  தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.  … Read more

99 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

பிளாக்பூல் இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில்  99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மன அழத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டியின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கண்ட அவரது குடும்பத்தினர் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்காணித்தனர். அதில் 48 வயதான வீட்டின் பராமரிப்பாளர் பிலிப் கேரி என்பவர்  அந்த மூதாட்டியின் அறைக்குள் நுழைவதையும், பின்னர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் … Read more

22 ஆண்டு பணிசெய்த ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்த தொழிலதிபர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வரும் அனிஷ் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அனிஷின் 22 ஆண்டுகால விசுவாசத்திற்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பாக ஷாஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 22 ஆண்டாக எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். … Read more

இளவரசர் சார்லஸ்க்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு

லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சுய தனிமைபடுத்தலில் உள்ளார்.  73 வயதான சார்லஸ், இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.  சார்லஸ் முதல் தடவையாக 2020 ஆண்டு மார்ச் மாதம் … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் திறப்பு – பொது மக்கள் பார்வையிட அனுமதி

புதுடெல்லி: குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர தோட்டத்திருவிழாவையொட்டி அங்குள்ள வரலாற்று புகழ் பெற்ற  முகலாய தோட்டத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றைத் தூய்மைப்படுத்தக் கூடிய தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிட த்தக்கது.வருடந்தோறும் இந்த மலர் தோட்டத்தை பொது மக்களும் பார்வையிட … Read more

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தட திட்ட அறிக்கை – மத்திய அரசு விளக்கம்

புது டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் மூன்று மெட்ரோ ரயில் பாதைகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் பூந்தமல்லி பைபாஸ் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.  இந்த திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்டு செலவு … Read more

தமிழகத்தில் மேலும் 3,592 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:     தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,971 ஆக பதிவாகி இருந்தது.   இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 3,592 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது. … Read more