கர்நாடகாவில் பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறப்பு – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. … Read more

கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர். இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் … Read more

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

சென்னை: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பரில் பதவி ஏற்றார். அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்தது. இதுதொடர்பான பரிந்துரையை கொலீஜியம் மத்திய அரசுக்கும், … Read more

மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டசபை பதவிக்காலம் அடுத்த இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு பிப்ரவரி 27 முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருந்த முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ம் … Read more

சீனாவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ மற்றும் ஆயுத அமைப்புகளை மேம்படுத்த பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதில் ஜே.எப்.-17 தண்டர் போர் விமானமும் அடங்கும். சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நவீன போர் விமானத்தின் புதிய ரகத்தை பாகிஸ்தான் அடுத்த மாத இறுதிக்குள் சீனாவிடம் இருந்து வாங்குகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் வான் பாதுகாப்பில் புதிய பலத்தை பெறும் என்று அந்நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜே.எப்-17 தண்டர் … Read more

அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார் – மு.க.ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார். ஈரோட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துரைத்து முதல்வர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலுக்காக உருவானதல்ல தி.மு.க. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உருவான இயக்கமே தி.மு.க. தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க. தி.மு.க. ஆட்சி இதுவரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய ஆட்சியாக இருந்தது. இனியும் … Read more

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், … Read more

பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

உலகளவில் கொரோனா மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்றுகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணிககளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருதால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாடு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு … Read more

இஸ்ரோ 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி காலை 5:59 … Read more

வாடகை பாக்கி வைத்துள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் அலுவலகம் – ஆர்.டி.ஐ.யில் தகவல்

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியா காந்தி வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் … Read more