நியூசிலாந்தில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 120 பேர் கைது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வழி என பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கட்டாயம் என்பது எங்களது … Read more

முதலமைச்சர் தன்னை ஒரு விளம்பர பிரியர் ஆக மட்டுமே பார்க்கிறார் – எடப்பாடி பழனிசாமி

காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவனக்குறைவாக இருந்து விட்டோம். இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. ஆமை போல் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து வெற்றியை பெற்றது. தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் … Read more

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு

சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இதேபோல், இந்திய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் இன்று 8.92 லட்சத்தில் இருந்து 7.90 லட்சமாக குறைந்துள்ளது. தினசரி நேர்மறை விகிதமும் 4.54 சதவீதத்தில் இருந்து 4.44 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:- வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இனி 7 நாள் … Read more

சூரிய புயலில் சிக்கியதால் 40 செயற்கைகோள்கள் வளிமண்டலத்தில் எரிந்தன

கேப்கெனவெரல்: பூமியின் சுற்று வட்டபாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமார் 2 ஆயிரம் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் மூலம் உலகின் தொலை தூர இடங்களுக்கு இணைய வழி சேவையை வழங்கி வருகிறது. இந்த செயற்கைகோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய 40 செயற்கைகோள்கள் சூரிய புயலில் சிக்கியதால் எரிந்தன. கடந்த 4-ந்தேதி வளி மண்டலத்தில் சூரியபுயல் ஏற்பட்டது. இந்த … Read more

அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை- தேர்தல் போட்டியில் மிரட்டப்பட்டாரா?

காஞ்சிபுரம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் (வயது 35) போட்டியிட்டார். அவர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜானகிராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேட்பு … Read more

செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் திருமண கோஷ்டி போல் சென்ற கும்பல்- 32 பேர் தப்பி ஓட்டம்

திருப்பதி: திருப்பத்தூரிலிருந்து 32 பயணிகளுடன் திருப்பதிக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் கீழே குதித்து நாலாபுறமும் தப்பி ஓடினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர். ஆனால் அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. பஸ்சில் 32 … Read more

மோசடி புகார் காரணமாக இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு

கொழும்பு: ‘திருமதி இலங்கை 2021’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர் புஷ்பிகா டி சில்வா. இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷைவின் போர்டு ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை வென்றார். இந்த போட்டியில் நடுவர்கள் முறைகேடாக செயல்பட்டதால்தான் தனக்கு வெற்றி கிட்டவில்லை என்று புஷ்பிகா டி சில்வா சமூக வலைதளங்களில் குற்றம் … Read more

பாஜக அலுவலக தாக்குதல்: காவல்துறை கூறும் காரணங்கள் கட்டுகதை- அண்ணாமலை

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வினோத் என்ற நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடடை கருத்தில் கொண்டு வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் பொதுப் பிரச்னையாகவே தலையிட்டு போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 10 … Read more

கேரளாவில் புதன்கிழமை தோறும் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கைத்தறி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே கூறிவந்தது. இந்த நிலையில் மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ், கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தற்போது பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி ஆடைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்கள் இனி கைத்தறி ஆடை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும் என மாநில தொழிற்துறை … Read more

கொரோனாவை அழிக்க 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் – அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக … Read more