தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்களது விசைப்படகுகளை மீட்டுத்தர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் … Read more

கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1.67 லட்சம் பேர் மீண்டனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4-வது நாளாக நேற்றும் 1 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 71,365 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 60 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் … Read more

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பக்குழுவின் தலைவர் மரியா வான்கோவ் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் … Read more

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

சென்னை: சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதையும் படிக்கலாம்…. தமிழக பா.ஜ.க. … Read more

உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் … Read more

ஜப்பான் இளவரசிக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி

டோக்கியோ : ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ. 38 வயதான இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

எஃப்.ஐ.எச்.புரோ லீக் ஹாக்கி போட்டி – தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

போட்செஃப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா,  தென்னாப்பிரிக்காவை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுதடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.  இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து மூன்று கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்திய வீரர்கள் குர்சாஹிப்ஜித் சிங் ,தில்ப்ரீத் சிங்  ஹர்மன்பிரீத் சிங் , அபிஷேக் , … Read more

உத்தர பிரதேசத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு

லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்கின்றன. முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், ஷாம்லி, ஹாபூர், கௌதம் புத்தநகர், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா மற்றும் மதுரா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த … Read more

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.   3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  துணை ஆணையர் தலைமையில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை … Read more

நிலையான அரசுக்கும், நிலையற்ற கட்சிக்கும் இடையே போட்டி – கோவா தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

பனாஜி: கோவா சட்ட சபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.  வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோவாவில் நிலையான பா.ஜ.க. அரசாங்கத்திற்கும், நிலையற்ற காங்கிரஸுக்கும் இடையிலான தேர்தல் இது.  என்னைப் பொறுத்தவரை, கோவா மக்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. … Read more