அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் – ஐ.நா.வில் இந்தியா புகார்

நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையால் அதன் சுற்றுப்புறத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2008 ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் 2016 ல் பதான்கோட்டில் பயங்கரவாதச் செயல்கள் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதலினால் ஏற்படும் மனித இழப்பை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட … Read more

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை

நியுயார்க்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தற்போதைய தலிபான் தலைமை எந்த நடவடிக்கை எடுத்ததற்கான  அறிகுறியும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் … Read more

என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம் – விசாரணைக்கு உத்தரவு

மும்பை: மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 4 ஆண்டு பழமையான இந்த விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். விமானம் பாதுகாப்பாக புஜ் நகரில் தரையிறங்கியது. மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, என்ஜின் கவர் ஓடுபாதையில் விழுந்தது. விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் இருந்து அந்த கவர் கண்டெடுக்கப்பட்டது என மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், என்ஜின் … Read more

தமிழர்களின் நாட்டுப் பற்றுக்குப் பிரதமர் மோடியின் சான்றிதழ் தேவையில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை வட இந்திய ஊடகங்கள் எனக்கு வழங்கியதை எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்துள்ளேன் என்பதை அகில இந்திய … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரியுடனான தொடர்பு குறித்து ஸ்வப்னாவிடம் இன்று விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து தூதரக முன்னாள் அதிகாரி உள்பட சிலரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்வப்னா என்பவரும் கைதானார். இவருக்கும் கேரள அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். ஜெயிலில் இருந்து விடுதலையான சிவசங்கரனுக்கு மீண்டும் … Read more

விமான பயணத்தின் போது பெண் பாலியல் பலாத்காரம் – லண்டன் போலீசார் விசாரணை

லண்டன்  அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, சக பயணி  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தாக  ஹீத்ரோ விமான நிலைய காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி கொண்டிருந்ததாகவும் அப்போது பிரிட்டனை சேர்ந்த அந்த நபர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.  இதனால்  தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான பயண முடிவில் அந்த நபர் லண்டன் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப். 19ம் தேதி பொது விடுமுறை

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தலில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வரும் 19-ம் … Read more

புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடவில்லை – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய புலனாய்வு அமைப்பு,  மத்திய அமலாக்க இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அவற்றின் விதிமுறைகளின்படி செயல்படுகின்றன. விசாரணை அமைப்புகளின் பணிகளில் அரசு தலையிடாது.  இந்தியாவில் ஊழல் என்பது கரையான்கள் போல நாட்டையே பாதிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் எழுப்பவில்லையா? நான் ஒன்றும் செய்யவில்லை என்றால் … Read more

பிரசித் கிருஷ்ணா அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் … Read more

ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்ட ராமானுஜர் சிலையை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் ராமானுஜர் சிலை நிறுவப்பட்டது. இதனை கடந்த சனிக்கிழமை பிரமதர் மோடி திறந்து வைத்தார். ராமானுஜர் சிலை வெள்ளி செம்பு தங்கம் துத்தநாகம் டைட்டானியம் உள்ளிட்டவை கொண்டு பஞ்ச உலோகத்தில் ரூ.135 கோடி செலவில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவில் 2-வது உயரமான சிலை ஆகும். ராமானுஜர் சிலை அமைக்கப்பட்ட இடம் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சிலையை சுற்றிலும் … Read more