மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்வில் இழுபறி- முடிவு எடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க. தலைவர்கள்

சென்னை: பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பு மனு … Read more

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675-ஆக குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 21-ந் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22-ந் தேதி 2,226 ஆகவும் இருந்தது. நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரத்து 68 ஆக உயர்ந்தது. கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 31 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வேறு … Read more

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு

கொழும்பு: கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1,20,000 டன் டீசல் … Read more

சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை புதுப்பொலிவுடன் சீரமைக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தமிழிசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை செயல்படாத நிலைக்கு தள்ளியுள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 2013-ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசால் தமிழிசையின் வரலாற்றைப் போற்றும் விதமாக அதை வளர்த்தெடுத்த தமிழிசை … Read more

திருப்பதியில் 9 அபிஷேக தரிசன டிக்கெட்டிற்கு ரூ.4.50 லட்சம் பறித்த வாலிபர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிர்யாளகுடாவை சேர்ந்த 3 குடும்பத்தினர் திருப்பதியில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர். ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது சித்தூரை சேர்ந்த சரவணன் என்பவரின் செல்போனை கொடுத்தனர். செல்போனில் தொடர்பு கொண்டு தரிசன டிக்கெட் கிடைக்குமா என விசாரித்தனர். எதிர்முனையில் பேசியவர் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் கிடைக்காது. வேண்டுமென்றால் அபிஷேக தரிசன டிக்கெட்கள் வாங்கித் தருவதாக தெரிவித்தார். அவர்கள் … Read more

உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் – விரைவில் அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து அந்தந்த மாநிலத் தலைவர்களை பதவி விலகுமாறு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார்.  இதனால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி காலியாகவுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து … Read more

சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் ஏராளமான பொது மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை. இந்த ஆண்டு 75-வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு … Read more

கணவன் கைவிட்டதால் வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 38). இவரது மகன்கள் தர்னீஷ் (9), நித்திஷ் (6). முத்துமாரி தனது 2 மகன்களுடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அருகே வாவிபாளையம் சேடர்பாளையம் அரசு பள்ளி வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். இந்தநிலையில் நேற்று காலை முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களும் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை … Read more

வாட்ஸ்ஆப் வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்

புது டெல்லி: கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது. இந்நிலையில் அச்செயலி வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே மக்கள் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீரான நிா்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி செயலியில் பான் … Read more

அம்மா உணவக சர்ச்சை- மகளிர் குழு ஒப்பந்தம் ரத்து

மதுரை: மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.  இதைத்தொடர்ந்து ஆம்லேட் விற்பனை செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்…இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றடைந்தது