தி.மு.க. மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இன்று முதல் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளன. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சி மாவட்டச்செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களுடன் சேர்ந்து ஆங்காங்கே ஓட்டு கேட்டும் வருகின்றனர். தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் மாலை 5.30 மணிக்கு காணொலி மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 6-ந்தேதி கோவை, 7-ந்தேதி … Read more

டெல்லியில் பரபரப்பு: சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

வடக்கு டெல்லி புராரி பகுதி பார்சிராம் என்கிளேவ் அருகே உள்ள யமுனா புஷ்டா என்ற இடத்தில் ரத்த கறைகளுடன் சாக்கு பை மூட்டை ஒன்று கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாக்கு பையை மீட்டு சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறியதாவது:- சாக்கு பையில் சுமார் 30 வயது … Read more

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக அன்று இலங்கையில் உள்ள காரை நகர் துறைமுகத்தில் 65 படகுகள் ஏலம் விடப்பட்டன. நேற்று காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் … Read more

அ.தி.மு.க. வெற்றியை தடுக்க சதி- சேலையூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலையூரில் நடந்த பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார். தமிழகத்தை நமது ஆட்சியில் தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றினோம். முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். அவரது வழியில் நான் 2019-ம் ஆண்டு தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் … Read more

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது- மத்திய மந்திரி பேச்சு

புதுடெல்லி: 10 ரூபாய் நாணயங்களில் போலிகள் நடமாடுவதாகவும், இதனால் கடைகளிலும், சில இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகிறதா?” என்றார். இதற்கு பதில் அளித்து மத்திய நிதித் துறை இணை மந்திரி பங்கஜ் சவுதாரி கூறியதாவது:- ரிசர்வ் வங்கியால் … Read more

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: 'WHO' எச்சரிக்கை

கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:- கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் … Read more

கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி

மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி பாறை இடுக்கில் சிக்கிய தவிக்கும் வாலிபர்: மீட்புப் பணியில் ராணுவம்

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள … Read more

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. மாநில அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என  உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அந்த மாநில உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. உயர்நீதிமன்றம் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு பரவி விடக்கூடாது என … Read more

29 தமிழக மீனவர்கள், 79 படகுகளை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

சென்னை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து 3 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர்.  இலங்கை … Read more