தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கப்பட வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூல் வெளியீடு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பேசியதாவது: இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நமது புகழ்மிக்க வரலாற்றால் நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த வேண்டும்.வரலாறு நமக்கு கற்றுத் தருகிறது, அறிவை பிரகாசிக்க வைக்கிறது.  தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை பள்ளிக் குழந்தைகள் அறியப்பட வேண்டும். இந்தியாவின் … Read more

10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது திருப்புதல் தேர்வு

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை  வெளியிட்டது. இதன்படி,  பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. … Read more

ஹிஜாப் விவகாரம் – மாணவர்கள் அமைதி காக்க கர்நாடக உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் வகையில் துணி அணிந்து வந்த  6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க … Read more

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் வைரலான வீடியோ

டெஹ்ரான்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில்  அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் … Read more

உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

லக்னோ : நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதிவரை  7 கட்டங்களாக  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்பதில் நான்குமுனை போட்டி நிலவிகிறது.  இதில்  ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நீயா, நானா? என்கிற … Read more

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகாவில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக சர்ச்சை

சிவமொக்கா: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர்.  அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர். ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. … Read more

ஒட்டாவா போராட்டம் எதிரொலி – கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

ஒட்டாவா: கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தடுப்பூசி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சரக்கு லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் அந்நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது.  சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்  … Read more

குடும்ப அரசியலை எதிர்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிக்கலை சந்தித்தார் – பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தற்கு மக்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோதி பதில் அளித்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார்.  இரண்டாவது நாளாக நேற்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சமீபத்தில் எங்களை விட்டுப் பிரிந்த லதாமங்கேஷ்கர், முதலில் கோவாவைச் சேர்ந்தவர். அவரது சகோதரர் ஹிருதய்நாத் … Read more

நாங்கள் உண்மையைப் பேசுவதால் பிரதமர் பயப்படுகிறார் – ராகுல்காந்தி பதிலடி

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: நான் மூன்று முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினேன். முதலாவதாக, பிரதமர் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார்.  ஒன்று மிகவும் பணக்கார இந்தியா, மற்றொன்று நம்பிக்கையற்ற, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் பெரும்பான்மையான மக்களுக்கான இந்தியா.  இரண்டாவதாக, இந்தியாவின் அரசு நிறுவனங்கள் பிரதமர் அழிக்கிறார். மூன்றாவதாக, அவரது வெளியுறவுக் கொள்கை, … Read more

பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள் – தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இருக்கிறோம். அதை ஆளுநருக்கு  மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறோம்.  ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பட்டியலின பழங்குடி மாணவர்கள், … Read more