பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்க வட்டி மானியத்துடன் கடனுதவி – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில்,  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய மீன்வளம், கால்நடைப்  பராமரிப்பு மற்றும்பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாநில கூட்டுறவு மற்றும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள், பால் பண்ணைகள், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.  தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் … Read more

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று மளமளவென சரிந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 5,104 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 4,519 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,15,898 மாதிரிகள் … Read more

உ.பி தேர்தல் பிரசாரம்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் வெற்றிப்பெறும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசம் … Read more

பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் பலி – ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் காமேக் செக்டாரில் நேற்று முன்தினம் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடந்தது.    இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் … Read more

ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு – கர்நாடகத்தில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.  இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் … Read more

5 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டோர் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு … Read more

ஹிஜாப் விவகாரம் – மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. … Read more

அசாதாரண சூழ்நிலை – கர்நாடகத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் … Read more

அருணாச்சல பிரதேசம் – பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது.    இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ … Read more

காஷ்மீர் குறித்து ஹூண்டாய் சர்ச்சை கருத்து – தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்திய வெளியுறவுத்துறை

புதுடெல்லி: பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என பிப்ரவரி 5-ம் தேதியை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. கடந்த 5-ம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இதற்கிடையே, ஹூண்டாய் … Read more