நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் தேவை – பிரதமர் மோடி வலியுறுத்தல்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.80,000 கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு உத்வேகம் அளிக்கப் போவது உத்தர பிரதேசம் என நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உந்துசக்தியாக உத்தர பிரதேசம் திகழப்போகிறது. ஒரே நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு … Read more

லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷிய நிலப்பரப்புகளை தாக்க மாட்டோம்- உக்ரைன் திட்டவட்டம்

3.6.2022 15:30: ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். தற்போது ரஷிய படைகள் கிழக்கு பகுதியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மற்ற பகுதிகளில் உக்ரைன் படைகள் சில பகுதிகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.  நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள 20 சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 15:00: உக்ரைன் மீதான ரஷியாவின் … Read more

2021- 22ம் ஆண்டிற்கான வைப்பு நிதி வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம்

2021-22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வைப்புத்தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது நான்கு பத்தாண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2021-22க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது. இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் … Read more

கோவில் திருவிழாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த தனி நீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்தார். அதில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும் போது ஆபாச வார்த்தைகள், ஆபாச … Read more

ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை

பட்கம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.  கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று வங்கி மேலாளராக பணிபுரிந்த விஜய் குமார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த பரபரப்பு முடிவதற்கு தற்போது மற்றொரு படுகொலையும் அரங்கேறியுள்ளது. காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் … Read more

தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, வேளச்சேரியில் தலைநிமிரும் தமிழகம் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- திமுக ஆட்சி அமைந்ததுமே தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது. இதை மக்கள் கண்கூடாக பார்த்தக்கொண்டிருக்கிறார்கள். 38 மாவட்டங்களில் இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்.  வெற்றிப்பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்ல இந்த போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் … Read more

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை- பினராயி விஜயன்

புது தில்லி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில்  மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இஸ்லாமியர்கள் இதில் … Read more

பாஜக குறித்து பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து- ஈபிஎஸ் பேட்டி

அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன், அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததாகல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. … Read more

3 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- கொரோனா ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,745 ஆக இருந்தது. நேற்று 3,712 ஆக உயர்ந்தது. இந்நிநிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக … Read more

தமிழர்களின் இதயங்களில் குடிகொண்ட கலைஞர்

“ஓய்வறியா சூரியன்” என்ற பெயருக்கு ஏற்ப ஓயாத உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த கலைஞர், அரசியல் மட்டுமின்றி, எழுத்து, பேச்சு, சினிமா, இலக்கியம் என பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டவர்.  ஆளுமையாக இருக்கட்டும், ஜனநாயகப் பண்பாக இருக்கட்டும், உரிமைக் குரலாக இருக்கட்டும், கொள்கைப் பிடிப்பாக இருக்கட்டும் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். டெல்லியை தமிழகம் உற்றுநோக்கிய காலத்தை மாற்றி, டெல்லியே தமிழகத்தை உற்றுப்பார்க்கும் அளவுக்கு நிலைமையை மாற்றிய … Read more