4-வது கொரோனா அலைக்கு தற்போது வாய்ப்பில்லை: மந்திரி ராஜேஷ் தோபே

மும்பை மராட்டியத்தில் தற்போதைய சூழ்நிலையில், 4-வது கொரோனா அலைக்கு வாய்ப்பில்லை என்று சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறினார். மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:- மராட்டியத்தில் சராசரியாக தினமும் 200 முதல் 250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உயரவில்லை. தொற்று பாதிப்பால் குணமடைபவர்கள் விகிதம் அதிகமாகவே உளளது. மாநிலத்தில் தடுப்பூசி … Read more

சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்

ராய்ப்பூர்: சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து அவர்களை அமைதிப்பாதையில் திருப்புவதற்காக, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்பலனாக அப்பகுதியில் வாழும் நக்சலைட்டுகள் தொடர்ந்து சரண் அடைந்து வருகின்றனர்.  இந்நிலையில், சத்தீஸ்கர் சுக்மா மாவட்டம் பஸ்தார் பிராந்தியத்தில் 9 நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் முன்பு சரண் அடைந்தனர். சரணடைந்தவர்களில் ஒருவரின் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சரணடைந்தவர்களில் 2 பெண்களும் அடங்குவர். அவர்கள் ஏராளமான … Read more

ஈரானில் 10 மாடி கட்டிடம் இடிந்து விபத்து- 5 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால குழுக்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 மோப்ப நாய் குழுக்களும், ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் 7 மீட்பு வாகனங்களும் சென்றன. அவர்கள் சென்றபோது, அந்த பகுதியில் வசித்த குடியிருப்புவாசிகள் நகர … Read more

திருப்பதி கோவில் இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் … Read more

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி

கொழும்பு : இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தநிலையில், கடந்த 9-ந் தேதி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, கடந்த 12-ந் தேதி பதவி ஏற்றார். இலங்கையில் 19-வது அரசியல் சட்ட திருத்தம் மூலம், அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு … Read more

இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றடைந்தது

கொழும்பு: இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.  இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

பீகாரில் சோகம் – லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி

பாட்னா: பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த லாரி மேற்கு வங்காளம் சிலிகுரியிலிருந்து ஜம்முவிற்கு இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்றது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும்,  படுகாயம் அடைந்த 8 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பூர்னியா … Read more

சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

ஷாங்காய்: ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கல் ஏதும் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்…பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் – பரபரப்பு வீடியோ

பா.ஜ.க. ஆட்சி ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து வருகிறது. ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பா.ஜ.க.வின் ஆட்சி மோசமானது. விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இன்றி விசாரணை முகமைகள் செயல்பட வேண்டும் … Read more

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.  இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ … Read more