முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்டது

மும்பை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), இன்று காலமானார்.  லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். லதா மங்கேஷ்கர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில், சிவாஜி பார்க்கில் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு மந்திரிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், … Read more

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் – இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். முதல் செட்டில் இந்திய ஜோடி தோற்றாலும், அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி வென்றது. இந்த இறுதிப்போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 44 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

மும்பை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் (92), இன்று காலை காலமானார்.  கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கர்  இல்லத்தில் வைக்கப்பட்ட … Read more

ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்

கார்கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் பேரழிவை சந்திக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ம.தி.மு.க.

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.  இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க, பா.ம.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92) இன்று காலமானார்.  அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய … Read more

அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட திட்டங்களைதான் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி இன்று சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில், வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.  பின்னர் அவர் பேசியபோது, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், ஆட்சிக்கு வந்தபிறகு, எந்த திட்டங்களையும்  நிறைவேற்றவில்லை என்றும் விமர்சனம் செய்தார். ‘ஏற்கெனவே நான் முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட … Read more

நானும் சுயசரிதை எழுதினால் பலரது முகமூடி கிழியும்- ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது. கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் மற்றும் இங்கு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை அமலாக்க துறையும் விசாரிக்க தொடங்கியதை தொடர்ந்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக பணிபுரிந்த மூத்த ஐ.ஏ.எஸ். … Read more

தேன் குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர்: தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை: இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன்.  எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திராவிடர் கழக … Read more

36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்- இந்தியாவின் இசைக்குயில் விடைபெற்றது

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் விடைபெற்றது. 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இசைக்குயிலின் குரல் இன்றுடன் முடிந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பண்டிட் தீரநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக பிறந்தார். லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிகல் பாடகர் மற்றும் நாடக கலைஞராக இருந்தார். இதனால் தன்னுடைய 4-வது வயதிலேயே தந்தையிடம் … Read more