கொரோனா பாதிப்பு- வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் துருக்கி அதிபர்

இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இத்தகவலை எர்டோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “எனக்கும் என் மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் தொடர்ந்து கடமையை செய்கிறோம். நாங்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என எர்டோகன் கூறி உள்ளார். துருக்கியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தலைவர்கள் பிரசாரம் இன்று தொடக்கம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் கோவை மாவட்டத்தில் இருந்து அவர் தனது காணொலி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த காணொலி காட்சி பிரசாரத்தை மக்கள் பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சியில் … Read more

எனது இதயம் நொறுங்கியது… லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் தனது இதயம் நொறுங்கியதாக கூறி உள்ளார். ‘லதா மங்கேஷ்கரின் மறைவு … Read more

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

மொகடிஷு: சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிஸ்மாயோ நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் கிளர்ச்சியாளர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியது. கண்ணி வெடித்ததால் வேன் முற்றிலும் சிதைந்தது.  இதில், வேனில் இருந்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என தெரிகிறது. கண்ணிவெடி வெடித்த சமயத்தில், அரசுப் … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்- சினிமா பிரபலங்கள் இரங்கல்

மும்பை: இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை … Read more

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம் இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த போட்டியில் இந்திய அணியினர்  அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், மிக உயர்ந்த நிலையிலான அவர்களின் ஆட்டத்திறன், இந்திய கிரிக்கெட்டின் … Read more

அமெரிக்கர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஜோ பைடன் அழைப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வல்லரசு நாட்டில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 8 லட்சத்துக்கும் அதிகமான ஒருநாள் பாதிப்புகளுடன் உச்சத்தை தொட்ட ஜனவரி மத்தியில் இருந்து, அங்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் இந்த தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் 49 மாகாணங்களில் தொற்று சற்றே குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஜனவரி மத்தியில் இருந்து 15 சதவீதம் குறைந்து … Read more

சிறு விவசாயிகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது – பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தின் பதன்சேருவில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நமது கவனம் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் மிகவும் தேவையான விவசாயிகளின் மீது இருக்கிறது.உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பருவநிலை மாற்றத்திலிருந்து நமது விவசாயிகளைப் பாதுகாக்க மீண்டும் அடிப்படைக்கு மற்றும் எதிர்காலத்திற்குப் பயணம் என்ற திட்டத்தில் இந்தியாவின் கவனம் இருக்கிறது. வேளாண்துறையில் … Read more

ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா?- ராஜ்நாத் சிங் கேள்வி

மதுரா: உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் சீன, பாகிஸ்தான் உறவு பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆட்சியின்போது 2 பெரிய ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா? சீனாவுக்கு பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை விட்டுக்கொடுத்தபோது நேருதான் … Read more

ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி சாதனை

ஆன்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது.ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது. இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி … Read more