டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவி காலத்தில் அவருக்கும், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் அனில் பைஜால் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: போர்க்குற்ற வழக்கில் ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

23.5.2022 20:30: உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, இத்தாலி பரிந்துரை செய்துள்ள அமைதித் திட்டத்தை பரிசீலித்து வருவதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். 20:00: ரஷிய வீரர் மீதான போர்க்குற்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்த குடிமகனை கொன்றதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 19:45: சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு … Read more

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் – பிரதமர் மோடி பெருமிதம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம் உங்களிடம் இருந்து அதீத அன்பைப் பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் தங்கியிருந்தாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றி உள்ளது. வன்முறை, அராஜகம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் … Read more

அதிகார மமதையின் உச்சத்தில் ஆட்சியாளர்கள்… பாஜக தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை பற்றி நான் ஏற்கனவே பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், பத்திரிக்கை அறிக்கைகளிலும் குறிப்பிட்டிருந்தேன் ஆளும்கட்சியின் அதிகாரமிக்க குடும்பத்தினருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். ஈசிஆர் சாலை ஜி ஸ்கொயர் சாலை என்ற பெயர் சூட்டி இருக்கலாம் என்று கூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். தமிழகத்திலுள்ள நிலம் மற்றும் மனை விற்பனையாளர்கள் தற்போது எந்த … Read more

படகு விபத்து- மியான்மர் கடற்கரையில் ஒதுங்கிய 14 உடல்கள் மீட்பு

யாங்கோன்: மியான்மர் கடற்கரையில் இன்று 14 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மவுங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு படகு சென்றதாக சமூக ஆர்வலர் … Read more

சென்னையில் அதிரடி சோதனை- ஹெல்மெட் அணியாத 3926 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் … Read more

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது- கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்கும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் சட்டம் அவரை தூக்கில் போட்டது. அதுபோன்றுதான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க … Read more

பெண் வேடமணிந்து எரியும் நெருப்பை விழுங்கும் பூசாரி- கேட்டவரம் கிடைப்பதாக கூறி குவிந்த பக்தர்கள்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாந்தாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அக்கினி காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பால்குடம், காவடி, கரகம், மதுக்குடம் மற்றும் மதலை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரியான மாரிமுத்து … Read more

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 44 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாக மாற்றப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டதன் மூலம் தடுப்பூசி செலுத்தியதால் அரசு சாதனை படைத்தது. ஆனாலும் இன்னும் 44 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருப்பதில் சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. … Read more