கோடை விடுமுறை- அரசு விரைவு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம்

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சொந்த ஊர்களுக்கும், வெளியூர் சுற்றுலா தலங்களுக்கும் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த … Read more

இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பா.ம.க.விடம் செயல்திட்டங்கள் உள்ளன- அன்புமணி ராமதாஸ்

அம்பத்தூர்: திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருமுல்லைவாயலில் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கே.என்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் ந.அனந்தகிருஷ்ணன், மா. ரமேஷ், பா.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் து.சேகர்,தினேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தின் முன்னேற்றம் தான் பா.ம.க.வின் இலக்காகும். அதிகாரம் இல்லாமலேயே தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை செய்து வந்துள்ளோம். மேலும் நம்மிடம் … Read more

அமெரிக்காவில் நடந்த ஆந்திர ஜோடி திருமணம்: தியேட்டரில் ஒளிபரப்பு- பெற்றோர், உறவினர்கள் வாழ்த்தினர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பர்வத ரெட்டி. இவரது மனைவி ஜோதி. இவர்களின் மகன் ரோஷித் ரெட்டி (வயது 23). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி,சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா (21). அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வருகிறார். ரோஷித் ரெட்டி, ரிஷிதா இருவரும் அமெரிக்காவில் காதலித்து வந்தனர். இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து தங்களது பெற்றோருக்கு … Read more

100 கோடி பேரை சந்திக்க தயாராகும் பா.ஜ.க. தலைவர்கள்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30-ந்தேதி 8-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அந்த கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது. அதற்கு முன்னதாக அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்று முக்கியமான மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பல … Read more

கலைஞர் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நான் தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான “மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி” என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. … Read more

அணையில் ஏறும்போது தடுமாறி விழுந்த வாலிபர் – பதறவைக்கும் வீடியோ

பெங்களூர்: கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூரில் ஸ்ரீநிவாச சாகர் அணை உள்ளது. இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது.  கோடைகாலம்  என்பதால் ஸ்ரீநிவாச சாகர் அணையில் குளிப்பதற்காக மக்களின் அதிகமாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில், 20 வயதான வாலிபர் ஒருவர் அணையின் சுவர் மீது ஏறி சாகசத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை அங்குள்ள பலரும் வீடியோ எடுத்துள்ளனர்.  அணையில் 25 அடி உயரம் வரை ஏறிய வாலிபர் அதற்கு மேல் ஏற முயன்ற போது நிலை தடுமாறி … Read more

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் – பரபரப்பு வீடியோ

கிங்க்ஸ்டன்: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது.  இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து  குதறியது. 15 பேர் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும்  துண்டிக்கப்பட்டதாக … Read more

பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு மதரீதியான கலவரத்தால் ஏற்பட்ட வடுவை ஆறவைக்க கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். மதம், சாதி மற்றும் அரசியல் ரீதியாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சில சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க தூண்டுகோலாக அமைந்து விடுமோ … Read more

வரும் 28ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் தகவல்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம், 28.05.2022 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசிக்கப்படுவதாக … Read more

கேரளா வரதட்சணை வழக்கு- கணவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொல்லம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என … Read more