ம.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்- வைகோ அதிரடி நடவடிக்கை

சென்னை: ம.தி.மு.க.வில் இருந்து 3 மாவட்ட செயலாளர்களை நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், 11.05.2022 அன்று காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைபெற உள்ளது என்றும், அதில் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், 29.04.2022 அன்று அவர்களுக்கு அறிவிப்பு … Read more

தலித் தலைவர் வாயில் இருந்து உணவை எடுத்து சாப்பிட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ

பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜமீர் அஹமது கான் உள்ளார். இவர் அம்பேத்கர்  ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.  அப்போது, ஜமீர் அஹமது கான், தலித் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு இனிப்பை ஊட்டி விட்டார். பதிலுக்கு தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி ஜமீர் அஹமது கான் சாப்பிட்டார்.  இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. … Read more

இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, அதிபர் கோத்பய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  அதன்படி, விவசாயம் மற்றும் வனவிலங்குத்துறை அமைச்சராக மகிந்த அமரவீரவும்,  ஊடகம் போக்குவரத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடல் தொழில் அமைச்சராக டக்ளஸ் தேனாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக  அநுருத்த ரணசிங்கேவும், … Read more

குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்த நிலையில், முதன் முறையாக பணியிலிருப்பவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, அதன் ஓய்வூதிய தாரர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. பணியில் இருப்போரையும், ஓய்வூதியதாரர்களையும் பிரித்துப் பார்த்து அகவிலைப்படி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுவதுதான் நடைமுறை என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப்பணியாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் தெரிவிக்கிறார்கள். … Read more

சீனா ஆபத்துடன் விளையாடுகிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சீனா அரசு குறித்து குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். ஜோ பைடன் பேசியதாவது:- உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷியாவின்  படையெடுப்பை முறியடிக்க உக்ரைன்னுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.  இதேபோல தற்போது சீனாவும், ‘ஒருங்கிணைந்த சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் … Read more

மாநிலங்களவை எம்.பி. பதவி- காங்கிரஸ் வேட்பாளர் யார்?: ப.சிதம்பரம்-அழகிரி இடையே கடும் போட்டி

சென்னை: பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களில் 57 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி புதிதாக 57 எம்.பி.க்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜே‌ஷ்குமார், அ.தி.மு.க. எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஜூன் 29-ந்தேதியுடன் நிறைவடைகிறது. காலியாகும் இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் … Read more

பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் – இன்று முதல் அமல்

சென்னை: சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.  இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் … Read more

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை- பிரதமர் மோடி உறுதி

டோக்கியோ: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.    இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளார். பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இரண்டு ஜனநாயக நாடுகளும் முக்கிய தூண்களாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா, பல நாடுகளுடன் மோதல் … Read more

‘நீங்கள் உங்களை நம்பினால் போதும்….’ தினேஷ் கார்த்திக் டுவீட்

மும்பை: இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு … Read more

ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்: அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்

கொழும்பு : இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கி அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளை பெறவும் வழி வகுத்தது. நாடாளுமன்றத்துக்கு அதிபரை விட கூடுதல் அதிகாரங்களை வழங்கிய 19-வது திருத்தமும் ரத்தானது. தற்போது இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. கடுமையான … Read more