பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு, குறைப்பது மாநில அரசா?- அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி

தூத்துக்குடி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிய வகை தொற்று பரவல் இல்லை. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 50-க்கு கீழே தான் உள்ளது. சுகாதார துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய … Read more

சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் மரணம்

பாலக்காடு: கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்த பைபி என்ற 72 வயது முதியவர் தனது குடும்பத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா சென்றார்.  சுற்றுலா முடிந்த அவர் நேற்று சேர்த்தலாவிற்க்கு திரும்பிகொண்டிருந்தபோது, பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே மாலை 5 மணி அளவில் அவர் வந்த டெம்போ டிராவலர் வாகனம், சிற்றூர் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.  இதில் பைபி, அவருடைய மனைவி … Read more

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்: இலங்கை மந்திரி எச்சரிக்கை

கொழும்பு: பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கும், சமையல் கியாசுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், சமையல் கியாஸ் நிலையங்கள் முன் நாள்கணக்கில் காத்திருத்தும் அவற்றைப் பெற முடியாத பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எரிபொருள் லாரிகளை சில குழுக்கள் தடுத்து நிறுத்துவதாகவும், தாங்கள் சொல்லும் இடத்தில் எரிபொருளை இறக்க வேண்டும், இல்லாவிட்டால் தீ வைப்போம் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் … Read more

டெல்லியில் இடியுடன் கனமழை- விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில்  இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பலத்த காற்று மற்றும் கனமழையால் டெல்லியின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முடங்கியது. டெல்லி என்சிஆர் அதை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 60-90 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

சிவசேனா தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை ஆதரிப்போம்: சரத்பவார் அறிவிப்பு

புனே : நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களான பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுதே, விகாஸ் மகாத்மே, ப.சிதம்ரபம், பிரபுல் பாடேல் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரின் பதிவக்காலம் ஜூலை 4-ந் தேதி முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மராட்டிய சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களையும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, … Read more

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை- சவுதி அரேபியா உத்தரவு

ரியாத்: கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 … Read more

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்பு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் பிரதமரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தல் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பானீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் முடிவில் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்பட்டார்.   இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் 31வது  பிரதமராக  பொறுப்பேற்றுக் கொண்ட அவர், டோக்கியோவில் நடைபெறும் குவாட் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக … Read more

அனைத்து மாநிலங்களும் 'வாட்' வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலத்துக்கு பிறகு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்றவற்றால் துயர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளது. விலை மேலும் குறைய, மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றி, உத்தரபிரதேசம் உள்பட அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேன்ஸ் திரைப்படவிழா- இந்திய ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளுடன் மத்திய இணை மந்திரி கலந்துரையாடல்

கேன்ஸ்: 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற மத்திய இணை மந்திரி முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். கேன்ஸில் உள்ள மார்ச்சே டு பிலிம்ஸில், ஆடியோ விஷுவல் தொழிலில் தடம் பதிக்க உத்தேசித்துள்ள ஐந்து இந்திய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேசினார். முன்னதாக வில்லேஜ் இன்டர்நேஷனல் ரிவியராவில் உள்ள இந்திய அரங்கை மந்திரி முருகன் பார்வையிட்டார். பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் உடன் சென்றிருந்தார்.  அப்பொழுது … Read more

10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு விருது – கவுரவித்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களாக கிராமப்புறங்களில் செயல்பட்டு வருபவர்கள் ஆஷா ஊழியர்கள். இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று நோயாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். மகப்பேறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், காசநோய் ஒழிப்பு போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடந்து வருகிறது. அதன் உயர்மட்ட தொடக்க நிகழ்ச்சியில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலக சுகாதாரத்துக்கு ஆற்றிய பணி, தலைமைப் … Read more